தமிழ் සිංහල English
Breaking News

மதுகமயில் மாட்டிறைச்சிக் கடைகளுக்கு தடை..!

மதுகம பொதுச்சந்தையில் இயங்கி வந்த மாட்டிறைச்சிக் கடையை 2019 முதல் மூடிவிடுவதற்கு மதுகம பிரதேச சபையில் முன்வைக்கப்பட்ட தீர்மானம் 22 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது.

இது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (மொட்டு) வின்பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் நாரவில சமித்தவஞ்ச ஹிமி பிரேரணையை முன்வைத்தார். மதுகம பொதுச்சந்தையில் இயங்கும் மாட்டிறைச்சிக் கடைக்கு 2019 ஆம் ஆண்டுக்கான அனுமதியை வழங்குவதா இல்லையா என்பது தொடர்பில் அங்கத்தவர்களிடையே வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். இது தொடர்பிலான விவாதத்தின் பின்னர் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போது 28 பேர் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தனர். ஏ.எச்.எம்.ரம்ஸான் உட்பட மூன்று பேர் பிரேரணைக்கு எதிராக வாக்களித்ததோடு, மூன்று பேர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது தவிர்ந்திருந்தனர்.

இந்த வாக்கெடுப்பு நடைபெறும் வேளையில் பிரதேசத்தின் பெருந்தொகையான பௌத்த மத குருக்கள் பிரசன்னமாகி இருந்ததோடு, ஏராளமான பொதுமக்களும் பார்வையாளர்களாகக் கலந்து கொண்டனர்.

இந்தத் தீர்மானத்தின் காரணமாக மத்துகம பிரதேச சபைக்கு டென்டராகக் கிடைத்து வந்த 38 இலட்சம் ரூபா வருமானத்தை மத்துகம பிரதேச சபை இழக்கின்றது.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com