தமிழ் සිංහල English
Breaking News

அமெரிக்க இஸ்ரேலிய மற்றும் ஐரோப்பிய யுத்த வெறிக் கூட்டணியில் இலங்கையும் இணைந்து விட்டதா?

பலஸ்தீன மக்களின் நியாயமான உரிமைகளுக்காக சர்வதேச அரங்குகளில் ஒரு காலத்தில் ஓங்கி ஒலித்த இலங்கையின் குரல் இப்போது மௌனித்து விட்டது. பலஸ்தீன மக்களை கைவிட்டு விட்டு அந்த மக்களின் தாயக பூமியில் பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா. ரஷ்யா ஆகிய நாடுகள் இணைந்து சர்வதேச சட்டங்களை புறக்கணித்து மத்திய கிழக்கு பிராந்தியத்தின் ஸ்திரப்பாட்டை குலைப்பதற்காக ஸ்தாபிக்கப்பட்ட இஸ்ரேலுடன் இலங்கையும் இணைந்து விட்டது.

2018 மே 14ம் திகதி அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்திய பலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் படைகளால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளை இலங்கை கண்டிக்கத் தவறியது முதல் இலங்கை அரசின் இந்த நிலைப்பாடு வெட்ட வெளிச்சமாகி உள்ளது. 1948ல் சியோனிஸ யூத நாடான இஸ்ரேலை ஸ்தாபிப்பதற்காக பலஸ்தீன மக்களை கொன்று குவித்து சுமார் ஏழு லட்சம் மக்களை அவர்களது தாயக பூமயில் இருந்து துரத்தி அடித்த சம்பவத்தை நினைவு கூறும் நகபா தினத்தை அனுஷ்டித்த போதே இந்தப் படுகொலைகளை இஸ்ரேல் நடத்தி உள்ளது.

இவ்வாறு சொந்த இடங்களில் இருந்து துரத்தி அடிக்கப்பட்ட பலஸ்தீன மக்களில் பலர் காஸா பிரதேசத்தில் உள்ள அகதி முகாம்களுக்குள்ளும் அண்டை நாடுகளிலும் ஏனைய பல இடங்களிலும் முடக்கப்பட்டனர். இவர்கள் வாழ்ந்த வீடுகளின் சாவிகள் இன்னமும் இவர்களில் பலரிடம் ஒரு நினைவுச் சின்னமாக உள்ளது. ஆனால் இந்த வீடுகளின் காணி உறுதிப் பத்திரங்களை இவர்களிடம் இருந்து கொள்ளையிட்ட இஸ்ரேலிய யூதப் படைகள் அந்த வீடுகளை இடித்து தரை மட்டமாக்கி விட்டன. இந்த அழிவை நினைவு கூறும் தினமாகத் தான் ஒவ்வொரு வருடமும் மே மாதம் 14ம் திகதியை பலஸ்தீன மக்கள் நகபா தினமாக அனுஷ்டிக்கின்றனர்.

இவ்வாண்டு இதே தினத்தில் அமெரிக்கா இதுவரை காலமும் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இருந்த தனது தூதரகத்தை ஜெரூஸலம் நகருக்கு மாற்றியதன் மூலம் இந்த தினத்தின் நிகழ்வுகள் முன்னரை விட உணர்வுபூர்வமாக இடம்பெற்றன. 1967ல் இஸ்ரேல் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு யுத்தத்தின் மூலம் கைப்பற்றிய நகரமே இஸ்ரேலின் புதிய தலைநகரமாக அமெரிக்கா தற்போது ஏற்றுக் கொண்டுள்ள ஜெரூஸலம் நகர். அநீதி இழைக்கப்பட்ட பலஸ்தீன மக்கள் ஜெரூஸலத்தை தமது தலைநகராக மதிக்கின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

பலஸ்தீனர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டம் மிகவும் அமைதியானது. இருப்பினும் அவர்கள் மீது தாக்குதல் நடத்தி இஸ்ரேல் படைகள் நிராயுதபாணிகளான அப்பாவி பலஸ்தீனர்கள் 62 பேரைக் கொன்றனர். Nலும் 2700க்கும் அதிகமானவர்கள் மோசமாகக் காயம் அடைந்துள்ளனர்.

பலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் நடத்தியுள்ள மிக அண்மைக்கால படுகொலைகளான இந்தச் சம்பவம் குறித்து சர்வதேச மட்டத்தில் பலத்த கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. ஐக்கிய நாடுகள் சபை உற்பட nரும்பாலும் எல்லா சர்வதேச அமர்வுகளிலும் இந்தச் சம்பவம் கண்டனத்துக்கு அளாகியுள்ளது. அதேபோல் அமெரிக்கா தனது தூதரகத்தை ஜெரூஸலம் நகருக்கு மாற்றியமையும் பெரும் கண்டனத்துக்கு ஆளாகியுள்ளது.

ஆனால் இலங்கை மட்டும் இந்த விடயத்தில் பெரும் மௌனம் சாதிக்கின்றது. பலஸ்தீன மக்களையோ அல்லது சொந்த பூமியில் மீண்டும் குடியேறும் அந்த மக்களின் நியாயமான உரிமைகளையோ இலங்கையின் இன்றைய அரசு பொருட்படுத்தவில்லை என்பதையே இது தெளிவுபடுத்துகின்றது. தள்ளாடிக் கொண்டிருக்கும் இந்த நல்லாட்சி அரசின் கடந்த மூன்று வருட கால நடவடிக்கைகளை சற்று உன்னிப்பாக அவதானித்தால் பலஸ்தீன மக்களின் உரிமைகளைப் புறக்கணித்து விட்டு இந்த அரசு இஸ்ரேலின் பக்கம்; சாய்ந்து வருவதை கண் கூடாகக் காணலாம்.
வழமைபோல் இந்த நாட்டின் பிரதான பிரிவு ஊடகங்கள் கூட 2018 மே 14 மற்றும் 15 ஆகிய தினங்களில் இடம்பெற்ற பலஸ்தீன படுகொலைகளை முடிந்தளவுக்கு மூடி மறைத்துள்ளன. பெயரளவுக்கு சில வரிகளை தான் இந்த ஊடகங்களின் செய்திகளில் காண முடிந்தது. இந்த நாட்டின் ஊடகத் துறை மீது மேற்குலகம் கொண்டுள்ள செல்வாக்கும் அவர்களின் சிந்தனை ஆதிக்கமும் இதற்கு பிரதான காரணங்களாகக் குறிப்பிடக் கூடியவை.

பலஸ்தீன விடயம் ஒரு மனிதாபிமான விடயம். மைத்திரி ரணில் அரசு இஸ்ரேலுடன் உள்ள நற்புறவின் காரணமாக இதை கண்டிக்கத் தவறி உள்ளது. பலஸ்தீனர்களுக்கு எதிராக இஸ்ரேல் இதுவரை 60க்கும் மேற்பட்ட படுகொலைகளைப் புரிந்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் இதவரை ஆகக் கூடுதலான கண்டனங்களுக்கு ஆளான ஒரு நாடாகவோ அல்லது அமைப்பாகவோ இஸ்ரேல் தான் காணப்படுகின்றது. அமெரிக்காவின் அழுத்தம,; ஐரோப்பாவின் நாசகார சதி என்பன இணைந்து செயற்பட்டதன் விளைவாக, தனது சாசனங்களுக்கான விதிமுறைகள் அதன் அடிப்படை கோட்பாடுகள் என்பனவற்றை எல்லாம் மீறி ஐக்கிய நாடுகள் சபை இஸ்ரேலை ஏற்றுக் கொள்ளும் நிர்ப்பந்த நிலை ஏற்பட்டது.

இஸ்ரேலுடன் ஏற்பட்டுள்ள புதிய நற்புறவின் காரணமாக பலஸ்தீன மக்களின் உரிமைகளைப் புறக்கணித்துள்ள இலங்கை அரசு அதன் மூலம் உள்ளுர் முஸ்லிம்களின் உணர்வுகளையும் புன்படுத்தி உள்ளது. மைத்திரி ரணில் ஆகிய இருவரையும் அதிகார பீடத்தில் அமர்த்துவதற்கு இலங்கை முஸ்லிம் வாக்காளர்களுள் 95 வீதமானவர்கள் வாக்களித்துள்ளனர் என்பதையும் அவர்கள் மறந்து விட்டனர். அரசாங்கத்தின் இந்த கொள்கை மாற்றத்தை அது அவ்வளவாகப் பிரபலப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை. இருந்தாலும் 2015 ஜனவரி எட்டாம் திகதி பதவியேற்று ஒரு சில மாதங்களில் இந்தக் கொள்கை மாற்றம் இடம்பெறத் தொடங்கியமை அவதானிக்கத் தக்கதாகும்.

2015 செப்டம்பர் 24 முதல் 30 வரை இஸ்ரேல் பாராளுமன்றக் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டது. அவர்கள் பாராளுமன்ற செயலாளர் தம்மிக தஸநாகக்கவைச் சந்தித்து இருதரப்பு ஆர்வும் கொண்ட பல விடயங்கள் பற்றி பேசியதாக அறிவிக்க்பபட்டது. பாராளுமன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள், பொது மக்கள் வருகை, பாராளுமன்றத்தில் அங்கவீனமுற்றவர்களுக்கான வேலைவாய்ப்பு வசதிகள் என்பன பற்றி பேசியதாக அறிவிக்கப்பட்டது.

புதிய அரசாங்கம் தன்னை சரியாக ஸ்திரப்படுத்திக் கொள்வதற்கு முன்பதாகவே அவசர அவசரமாக இஸ்ரேலிய தூதுக்குழு ஒன்று ஏன் வந்தது அல்லது வரவழைக்கப்பட்டது என்ற மர்மத்தை தான் இன்னும் எவராலும் புரிந்து கொள்ள முடியவில்லை. இஸ்ரேல் நீண்ட கால யுத்த வரலாறு கொண்ட நாடு, அதன் கொள்கைகளும் கோட்பாடுகளும் நடைமுறைகளும் இன்று மத்திய கிழக்கை கொலைகளமாக மாற்றி உள்ளது. அவ்வாறான ஒரு நாட்டோடு இலங்கைக்கு உள்ள பரஸ்பர நலன்கள் என்ன என்பதும் விடை காண முடியாத அடுத்த கேள்வியாகும்.
இலங்கை 2000 வருட பழமையான நாகரிகத்தைக் கொண்ட ஒரு நாடு. 1960 களிலும் 1970 களிலும் உலகம் முழுவதும் சுதந்திரத்துக்காகப் போராடிய பல்வேறு ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக இலங்கையின் குரல் சர்வதேச அரங்குகளில் ஓங்கி ஒலித்த போது மூன்றாம் மண்டல நாடுகளில் பெரும் கௌரவத்தோடு இலங்கை நோக்கப்பட்டது.

மறுபுறத்தில் இஸ்ரேல் என்பது முழுக்க முழுக்க யுத்தத்திலும் வன்முறைகளிலும் நாசம் விளைவிப்பதிலும் தங்கியிருக்கும், சர்வதேச சட்டங்களையும் சாசனங்களையும் மீறி செயற்கையாக உருவாக்கப்பட்ட நவ பாஸிஸவாத போக்கு கொண்ட ஒரு பகுதி.
உலக சனத்தொகையில் ஐந்தில் ஒரு பங்கினராக முஸ்லிம்கள் உள்ளனர் 55 க்கும் அதிகமான முஸ்லிம் நாடுகள் உள்ளன. இந்த நாடுகள் பல்வேறு வழிகளில் இலங்கைக்கு உதவியாகவும் நற்புறவுடன் இருப்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான ஒரு பின்னணியில் பாராளுமன்ற செயலாளர் என்றாவது ஒரு நாள் ஒரு முஸ்லிம் தூதுக்குழுவை வரவழைப்பது பற்றி சிந்தித்துப் பார்த்துள்ளாரா?

அதன் பிறகு 2016 பெப்ரவரியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜெர்மனிக்கு ஒரு விஜயம் மேற்கொண்டார். அமைச்சர்கள் ரவி கருணாநாயக்க, தயா கமகே, மலிக் சமரவிக்ரம, மகிந்த சமரசிங்க ஆகியோரும் அவருடன் சென்றிருந்தனர். அவர் பெர்லினை சென்றடைந்த முதலாவது தினத்திலேயே ஹொலோகோஸ்ட் சம்பவத்தில் கொல்லப்பட்ட யூதர்களின் நினைவாக நிர்மாணிக்கப்பட்டுள்ள அங்குள்ள சர்ச்சைக்குரிய ஹொலோகோஸ்ட் நினைவில்லத்துக்கும் (இரண்டாம் உலக மகா யுத்த காலத்தின் போது இலட்சக்கணக்கான யூதர்களை ஜெர்மன் அதிபர் ஹிட்லரின் படைகள் விஷ வாயு பாய்ச்சி கொன்றதாகக் கூறப்படும் சம்பவமே ஹொலோகோஸ்ட் சம்பவம் என அழைக்கப்படுகின்றது. ஆனால் இது மிகைப்படுத்தப்பட்ட யூதர்களுக்கு உலக ஆதரவை திரட்டுவதற்கான ஒரு கற்பனை என்ற வாதமும் உள்ளது) யூத நூதன சாலைக்கும் விஜயம் செய்தார்.

தமது தாயக பூமியில் நிம்மதியாகவும் அமைதியாகவும் வாழ்ந்து கொண்டிருந்த பலஸ்தீன மக்களை கொன்று குவித்து எஞ்சியவர்களை துரத்தி அடித்து அதன் பின்னரும் அந்தப் பிராந்தியத்தின் அமைதியை குலைக்கும் வகையில் யூதர்கள் உலகில் செய்து வரும் அநியாயங்களையும் அட்டுழியங்களையும் மறைப்பதற்காகவும் அவற்றை நியாயப்படுத்தவதற்காகவும் செய்து வரும் போலிப் பிரசாரத்துக்கு ஆதரவு தேடுவதற்காக நிர்மாணிக்கப்பட்டவை தான் இவை என்று கருத்தும் நிலவுகன்ற ஒரு நிலையில் இலங்கை போன்ற ஒரு நாட்டின் தலைவர் அவ்வாறானதோர் இடத்துக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்வது விவேகமான ஒரு விடயம் அல்ல.

இலங்கையில் இஸ்ரேலியர்கள் நிலை கொண்டுள்ளதை இலங்கை முஸ்லிம்கள் எதிர்க்கின்றனர். வெறுக்கின்றனர். இஸ்ரேலியர்கள் எங்கு சென்றாலும் அங்கு முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களையும் வன்முறைகளையும் பிரசாரங்களையும் திட்டமிட்டு அமுல் செய்வது தான் அவர்களின் வரலாறு. அதற்கென அவர்கள் உள்ளுர் கூலிப்படையினரின் சேவைகளையும் பெற்றுக் கொள்வர். இது இன்று வரை உலக அரங்கில் நிரூபிக்கப்பட்ட ஒரு விடயம். இதே காரியத்தை இலங்கையிலும் அவர்கள் செய்யலாம் என்ற சந்தேகம் தான் முஸ்லிம்களின் இந்த எதிர்ப்புக்கு மூல காரணம். உதாரணத்துக்கு பொது பல சேனா அமைப்புக்கு ஒரு வீட்டை நன்கொடையாக வழங்கியுள்ளவர் ஒரு ஜெர்மனிய யூதர். இஸ்ரேலின் காட்டுமிராண்டித் தனங்களுக்கு எதிராக இலங்கையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களின் போது தான் அவர் இந்த வீட்டை பொது பல சேனாவுக்கு தானம் செய்தார்.

அதன் பிறகு மற்றொரு சர்வதேச யுத்தக் குற்றவாளியான பிரிட்டனின் முன்னாள் பிரதம மந்திரி டொனி பிளாயர் உலகமே அதிசயிக்கும் வகையில் அன்றைய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவிக்ரமவால் விடுமுறைக்காக இலங்கைக்கு அழைக்கப்பட்டார். 2015 நவம்பரில் அவர் தனது குடும்பத்தோடு இங்கு வந்து இரண்டு வார காலமாக உல்லாசமாக பொழுதை கழித்துச் சென்றார்.
பதவியில் இல்லாத ஒரு சர்ச்சைக்குரிய யுத்தக் குற்றவாளியை, இந்த நாட்டின் புத்தி ஜீவி சமூகத்தினதும், முஸ்லிம் சமூகத்தினதும் உணர்வுகளைப் பொருட்படுத்தாமல் இலங்கை மண்ணில் உல்லாசப் பயணியாக அரசாங்கமே வரவழைத்தது இந்த நாட்டுக்கே பெரும் அவமானமாகும்.

எவ்வாறேனும் இவை எல்லாமே எதிர்ப்பார்க்கப்படாத விடயங்களும் அல்ல. காரணம் அமெரிக்காவினதும் மேற்கு உலகினதும் மிக உறுதியான ஒரு ஆதரவாளர் தான் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. முன்னர் அவர் பிரதமராக இருந்த போதுதான் ஈராக் மீது அமெரிக்கா படை எடுத்தது. அப்போது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அதை கண்டிக்க முற்பட்டபோது அரசாங்கத்தில் இருந்து வெளியேறிவிட்டு அதைச் செய்யலாம் என்று அப்போது கூறியவர் தான் ரணில் விக்கிரமசிங்க.

2009ல் முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுனால் நியமிக்கப்பட்ட விசாரணையாளர் சேர் ஜோன் சில்கொட் நடத்திய ஈராக்கில் பிரிட்டிஷ் படைகளின் ஆக்கிரிப்பு பற்றிய விசாரணை அறிக்கையின் படி ஜோர்ஜ் புஷ்ஷுடன் இணைந்து டொனி பிளாயர் நடத்திய ஈராக் ஆக்கிரமிப்பு முற்றிலும் தவறான புலனாய்வுத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டது என நிரூபிக்கப்பட்டுள்ளது. அவர் எடுத்த நடவடிக்கைகள் முற்றிலும் பிழையானவை எனவும் நிரூபணமாகியுள்ளது. ஒரு காலத்தில் எண்ணெய் வளம் கொழிக்கும் பூமியாக இருந்த ஈராக் இந்த ஆக்கிரமிப்பின் காரணமாக இன்று வெற்று பூமியாக்கப்பட்டுள்ளது. இலட்சக்கணக்கான உயிர்களும் பலியாக்கப்பட்டன.

புஷ் – பிளயர் கூட்டணி அப்பாவி ஈராக்கியர்களை கொன்று குவித்தது. அந்த நாட்டின் நீர் விநியோகம், மின்சார விநியோகம், உணவு விநியோகம், வடிகான் வசதிகள், போக்குவரத்து வலையமைப்பு, சுகாதாரம், கல்வி மற்றும் மருத்துவ வசதகள் என அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளையும் நாசப்படுத்தியவர்கள் தான் புஷ்ஷும் பிளயரும். முப்பது லட்சம் அப்பாவி ஈராக் பொது மக்கள் கொல்லப்ட்டனர். இலட்சக்கணக்கானவர்கள் அகதி முகாம்களுக்குள் தள்ளப்பட்டனர். இன்னும் லட்சக்கணக்கானவர்கள் கற்பழிப்பு உற்பட மோசமான பல சிததிரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டனர்.

இந்தக் குற்றங்கள் அணைத்துக்குமான ஆதாரங்கள் படங்களோடு இருக்கின்றன. பெண் கைதிகள் கூட்டமாகக் கற்பழிக்கப்பட்டமை, மேசமான கோணங்களில் அவர்கள் படம் பிடிக்கப்பட்டமை என பல சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன. ஆனால் மிகவும் பாரம்பரியமான பின்னணி கொண்ட இந்த மக்கள் தாங்கள் எதிர் நோக்க வேண்டிய பல பின்விளைவுகளுக்கு அஞ்சி மௌனம் காத்து வருகின்றனர். இதையும் மீறி வெளியாகியுள்ள தகவல்கள் ஆச்சரியம் அளிக்கும் வகையில் உள்ளன. இஸ்ரேலிய வடிவமைப்பக்கு ஏற்ப நவ காலணித்துவ நிகழ்ச்சி நிரல் ஒன்றை அரங்கேற்ற இந்த யுத்தக் குற்றவாளிகள் இணைந்து வேண்டுமென்றே நடத்திய மனித குலத்துக்கு எதிரான இந்த அட்டூழியங்களைத் தட்டிக் கேற்க இதுவரை சர்வதேச அளவில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமை உலகையே தலைகுணிய வைத்துள்ள ஒரு விடயமாகும்.
இந்த அவமானங்களுக்கெல்லாம உச்சமாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் நினைவுப் பேருரை நிகழ்த்தூறும் பிளயருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இலங்கையின் கீhத்திமிக்க ஒருவரின் நினைவுப் பேருரை நிகழ்த்த அதுவும் இந்த நாட்டின் இனப்பிரச்சினை பற்றி பேச ஒரு யுத்தக் குற்றவாளயைத் தான் அழைக்க வேண்டுமா?
இந்த அரசாங்கத்தின் நல்லாட்சிக்கான எல்லா உரிமை கோரல்களுக்கும் அப்பால் அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கொள்கை என்பது அnரிக்கா, பிரிட்டன், இஸ்ரேல் மற்றும் ஐரோப்பிய நவ காலணித்துவ சக்திகளால் அபகரிக்கப்பட்ட ஒன்றாகவே இன்று காணப்படுகின்றது.

2016 அக்டோபர் 13ல் ஐக்கிய நாடுகள் சபையில் யுனெஸ்கோ நிறுவனம் இஸ்ரேலை கண்டித்து முன்வைத்த ஒரு தீர்மானத்தின் போது இலங்கை வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. பலஸ்தீனத்தின் அல் ஹரம் அல் ஷரீப், மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய பகுதிகளில் இஸ்ரேல் தேற்கொண்டு வரும் நாசகாரத் திட்டங்களைக் கண்டித்து இந்தத் தீர்மானம் முன் வைக்கப்பட்டது.

பலஸ்தீன் விடயத்தில் இலங்கை அரசின் இந்த அதிர்ச்சிமிக்க திருப்பு முனை உலகம் முழுவதும் உள்ள 105 கோடி முஸ்லம்களை புன்படுத்தும் ஒரு செயலாகும்.
இதேபோல் தான் ஆசியாவின் மிகவும் மோசமான பயங்கர மனித அனர்த்தம் என வர்ணிக்கப்பட்ட மியன்மாரின் றோஹிங்யா முஸ்லிம்கள் விடயத்திலும் இலங்கை அரசு கண்டும் காணாமல் நடந்து கொண்டது. நவீன உலகின் மிகவும் மோசமான இந்த மனித அனர்த்தத்தை முழு உலகும் கண்டித்தன. அதை கண்டு கொள்ள மறந்த நாடுகள் இஸ்ரேல், இந்தியா, சீனா, இலங்கை என்பன மட்டுமே.

வெகுதூரத்தில் உள் மேற்குலக நாடுகளின் நகரங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்கள் மற்றும் தாக்குதல் சம்பவங்களை இலங்கை ஒருபோதும் கண்டிக்கத் தவறியதில்லை. ஆனால் எமது ஆசியா கண்டத்துக்கு மிக அருகாமையில் இருக்கும் ஒரு பிராந்தியத்தில் ஏழு லட்சம் மக்கள் மீது அச்சுறுத்தல் பிரயோகிக்கப்பட்டு அவர்கள் வயது மற்றும் பால் வித்தியசமின்றி தமது வாழ்விடங்கில் இருந்து விரட்டப்பட்டதன் தொடராக இடம்பெற்று வருகின்ற படுகொலைகளை தான் இலங்கை கண்டு கொள்வதே இல்லை. இந்த நல்லாட்சியின் மனச்சாட்சியை இந்தச் சம்பவங்கள் ஒருபோதும் உறுத்தியதாகத் தெரியவே இல்லை. இங்குள்ள துறைசார் நிபுணர்கள், கல்விமான்கள், சிவில் அமைப்புக்கள், மகளிர் அமைப்புக்கள் என்பனவற்றின் நிலையும் இதுவே தான். உள்ளுர் விடயங்களை எடுத்துக் கொண்டாலும் கூட இந்த நாட்டின் முஸ்லிம் சமூகத்தை இனவாதத் தாக்குதல்களில் இருந்து காப்பாற்றுவதற்கு இந்த அரசாங்கம் மிக மோசமாகத் தவறியுள்ளதால் உள்ளுர் முஸ்லிம்களும் அரசின் மீது அதிருப்தி அடைந்த நிலையிலேயே உள்ளனர்.

கின்தோட்டை, அதனைத் தொடர்ந்து அம்பாறை மற்றும் திகன ஆகிய இடங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்ட போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான இந்த அரசு நடந்து கொண்ட விதம் முஸ்லிம்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. கடைசியாக இடம்பெற்ற மிக மோசமான திகன சம்பவங்களின் போது பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரின் ஒத்துழைப்போடு அரசியல்வாதிகளும் ஏனைய இனவாத சக்திகளும் நன்கு முன்கூட்டியே திட்டமிட்டுதான் இந்தக் காரியங்களில் ஈடுபட்டுள்ளனர் என்ற பலத்த சந்தேகம் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் பரவலாகக் காணப்படுகின்றது. நடந்தது என்ன என்பது பற்றி அறிந்து கொள்ள எந்த ஆர்வமும் அற்ற ஜனாதிபதி மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறுவதற்கு பதிலாக தனது நண்பர் நரோந்திர மோடியை சந்திக்க ஓடோடிச் சென்றார். அவரோ 2002ல் குஜராத் மாநிலத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை எரித்துக் கொன்று துவம்சம் செய்த பிரதான சூத்திரதாரி. தொடர்ந்தும் முஸ்லிம்களை கொல்ல தனது ஆர்எஸ்எஸ் காடையர்களை இந்தியாவுக்குள் ஏவி விட்டுள்ளவரும் இதே மோடிதான்.

லத்தீப் பாரூக்

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com