தமிழ் සිංහල English
Breaking News

ஏ.ஆர். மன்சூர்: வாழ்க்கையும் வரலாறும்.!

முன்னாள் அமைச்சர் கலாநிதி ஏ.ஆர். மன்சூர் அவர்கள் தொடர்பான சிறு குறிப்புகளை தவிர்த்து அவரது அரசியல் பணி மற்றும் சேவைகள் பற்றிய அனுபவங்களை கொண்டு செல்வது ஒவ்வொருவரினதும் பொறுப்பாகும்.

ஏ.ஆர். மன்சூர் அவர்களின் பிறப்பும் குடும்பப் பின்னணியும், கல்வி, சமூக சிந்தனை, தொழில், குடும்ப வாழ்வு, அரசியல், காலத்தால் அழியாத சேவைகள், இன நல்லுறவு, கௌரவங்களும் பாராட்டுக்களும் போன்ற பல விடயங்களை உள்ளடக்கியதாக இந்நூல் அமைந்துள்ளது.

ஏ.ஆர். மன்சூர் அவர்கள் விரும்பியதைப்போல் தனிநபர் ஒருவரின் புகழ் பாடும் நூலாக அல்லாமல் அவரது காலத்தில் காணப்பட்ட சமூக மற்றும் அரசியல் சூழலின் முக்கிய பதிவாக அமைந்துள்ளது.

சுமார் 480 பக்கங்களைக் கொண்டுள்ள இந்நூலின் இறுதிப் பணியான செவ்விதாக்கள் பணிகள் நடைபெற்று வருகின்ற நிலையில் இதன் வெளியீட்டு நிகழ்வினை மிக விரைவாக செய்து வைக்க உத்தேசித்துள்ளேன்.
எனவே இதுதொடர்பாக என்னுடன் இணைந்து செயற்பட விரும்புபவர்கள் என்னைத் தொடர்பு கொள்ளலாம்.
நன்றி
ஏ.எம். பறக்கத்துள்ளாஹ் Athambawa Mohamed Barakathullah

YL Mansoor

 

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com