தமிழ் සිංහල English
Breaking News

ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படும்: மக்கள் அதிர்ச்சி!

ஸ்டெர்லைட் மீண்டும் திறக்கப்படும் என்று ஸ்டெர்லைட் தலைமைச் செயல் அதிகாரி ராம்நாத் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் காவல்துறை மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது. இதன் காரணமாக மொத்தம் 13 பேர் மரணம் அடைந்தனர்.

60 க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்காக அரசாணை வெளியிட்டு இருக்கிறது. இதுமக்கள் மத்தியில் பெரிய மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது.

இந்நிலையில் ஸ்டெர்லைட் மீண்டும் ஓரிரு மாதங்களில் திறக்கப்படும் என அதன் தலைமைச் செயல் அதிகாரி ராம்நாத் அதிரடியாக பேட்டி அளித்துள்ளார்.

மேலும், ஸ்டெர்லைட் பணியாளர்கள் பணிக்கு திரும்புவார்கள் என்றும் கூறியுள்ளார்.

அரசு நிரந்தரமாக மூடிய ஆலை மீண்டும் திறக்கப்படும் என கூறப்பட்டுள்ளது தமிழக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com