தமிழ் සිංහල English
Breaking News

இக்கட்டான நிலையில் இலங்கை..!

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவு அணிகளுக்கிடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

போட்டியில் தமது முதலாவது இன்னிங்சிற்காக துடுப்பாடி வரும் இலங்கை அணி இரண்;டாம் நாள் ஆட்ட முடிவு வரை 3 விக்கட்டுக்களை இழந்து 31 ஓட்டங்களை பெற்றுள்ளது.

முன்னதாக தமது முதலாவது இன்னிங்சிற்காக துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 8 விக்கட்டுக்களை இழந்து 414 ஓட்டங்களை பெற்றிருந்த போது ஆட்டத்தை இடைநிறுத்தி கொண்டது.

ஷேன் டவுரிச் 125 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக் கொடுத்தார்.

இலங்கை சார்பில் லஹிரு குமார 4 விக்கட்டுகளை வீழ்த்தினார்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com