தமிழ் සිංහල English
Breaking News

சிங்கப்பூர் சந்திப்பு வெற்றியடைந்தால் வடகொரியா தலைவரை அமெரிக்காவிற்கு அழைப்பேன்..!

சிங்கப்பூர் சந்திப்பு வெற்றிகரமாக முடிந்தால் வடகொரியா தலைவரை அமெரிக்கா வருமாறு அழைப்பு விடுப்பேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார். வடகொரியா அதிபர் கிம்ஜோங் உன், அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப் இருவரும் வரும் 12-ம் தேதி சிங்கப்பூரி்ல் சந்தித்து பேச ஏற்பாடு நடந்து வருகிறது.

இந்த சந்திப்பு குறித்து ஆலோசனை நடத்துவதற்காக ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே அமெரிக்கா சென்று அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப்பை சந்தித்து பேசினார்.

பின்னர் புளோரிடாவில் செய்தியாளர்களுக்கு டிரம்ப் அளித்த பேட்டி, வடகொரியா அதிபர் கிம் ஜோங்குடன் சிங்கப்பூரில் ” நடக்க உள்ள சந்திப்பு வட கொரியாவிற்கு ஒரு புதிய எதிர்காலத்தின் தொடக்கத்தை பிரதிபலிக்கும், உண்மையை சொல்லப்போனல் உலகிற்கு ஒரு பிரகாசமான புதிய எதிர்காலம்” இந்த சந்திப்பு வெற்றிகரமாக முடிந்தால் அடுத்த 5 நாட்களுக்குள் கிம்ஜோங் உன்னை அமெரிக்கா வருமாறு அழைப்பு விடுப்பேன்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com