தமிழ் සිංහල English
Breaking News

முஸ்லிம் சமூகத்தினருக்கு அதிர்ச்சி கொடுத்த ட்ரம்ப்..!

முஸ்லிம் சமூகத்தினருக்கு ஆச்சரியமூட்டும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஏற்பாட்டில் வெள்ளை மாளிகையில் இஃப்தார் நிகழ்வு நடைபெற்றுள்ளது.

ஏழு முக்கிய முஸ்லிம் நாடுகளிலிருந்து வரும் மக்களை அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதித்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த ட்ரம்பின் இந்த ஏற்பாடு, அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

உணவு விருந்துபசாரத்துடன் நேற்று (புதன்கிழமை) குறித்த இஃப்தார் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் வசிக்கும் முஸ்லிம் சமூகத்தின் உறுப்பினர்களை அங்கீகரித்து ஒற்றுமைக்கான ஒரு செய்தியை வழங்கியுள்ளார்.

உலகில் பெரியதும் அதிவேகமாக வளர்ந்துவரும் மதங்களின் புனிதமான பாரம்பரியத்தை தாம் மதிப்பதாக, ட்ரம்ப் தனது உரையில் தெரிவித்துள்ளார்.

சவுதி அரேபியா, குவைத், ஜோர்தான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் உட்பட பல முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளிலிருந்து அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் தூதுவர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.

ட்ரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் ஏற்பாடு செய்துள்ள முதல் இஃப்தார் நிகழ்வு இதுவாகும். கடந்த வருடம் வெள்ளை மாளிகையில் இஃப்தார் நிகழ்வு ஏற்பாடு செய்யப்படாத நிலையிலேயே, இது முஸ்லிம் சமூகத்தினருக்கு ஆச்சரியமூட்டியுள்ளது.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com