தமிழ் සිංහල English
Breaking News

கவுதமாலா எரிமலை வெடிப்பு-பலி எண்ணிக்கை 99 ஆக அதிகரிப்பு!

கவுதமாலா சிட்டி:மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்று கவுதமாலாவில் உள்ள பியூகோ என்ற எரிமலை 2-ம் தேதி வெடித்துச் சிதறியது.

இதிலிருந்து வெளியேறிய எரிமலை குழம்புகள் மற்றும் சாம்பல் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதியுற்றனர். கவுதமாலா சர்வதேச விமான நிலையம் உடனடியாக மூடப்பட்டது. கடும் சவால்களுக்கு மத்தியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்..

இந்நிலையில், நேற்று நடைபெற்ற மீட்பு பணியின்போது மேலும் 30 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இதன்மூலம் கவுதமலா எரிமலை வெடித்து சிதறியதில் பலியானோர் எண்ணிக்கை 99 ஆக உயர்ந்துள்ளது.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com