தமிழ் සිංහල English
Breaking News

வெளியானது காலா : ரசிகர்கள் கொண்டாட்டம்.!

ரஜினி நடித்த காலா படம் உலகம் முழுக்க ஆர்ப்பரிக்க ரிலீஸானது. ரசிகர்கள் பட்டாசு வெடித்து திருவிழா போன்று கொண்டாடி மகிழ்ந்தனர்.

ரஜினி நடிப்பில், ரஞ்சித் இயக்கியுள்ள காலா படம் உலகமெங்கும் இன்று ரிலீசானது. இந்த படத்தை தனுஷ் தயாரித்திருக்கிறார். லைகா புரொடக்ஷன்ஸ் இப்படத்தை வெளியிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 600-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் படம் வெளியாகி உள்ளது. காலா படத்திற்கு சிறப்பு காட்சி வெளியிட தமிழக அரசு நான்கு நாள் அனுமதியளித்துள்ளது.

இதனால் சென்னை நகர் உள்பட பல ஊர்களில் காலை 7 மணிக்கு முதல் காட்சி வெளியானது. மதுரை உள்ளிட்ட ஒரு சில ஊர்களில் நள்ளிரவு மற்றும் அதிகாலை சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டன.

துபாய், சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் நேற்று இரவு படம் வெளியானது. அங்கும் ரசிகர்கள் அமர்க்களமாய் படத்தை வரவேற்று கொண்டாடினர்.

கொண்டாட்டம்
ரஜினியின் அரசியல் அறிவிப்பிற்கு பின்னர் மிகுந்த எதிர்பார்ப்போடு வெளியாகி உள்ள படம் காலா. ஆகையால், ரசிகர்கள் பட்டாசு வெடித்து காலா படத்தை வரவேற்றனர்.

தியேட்டர்களுக்கு பாதுகாப்பு
சென்னையில் காலா படம் வெளியாகியுள்ள திரையரங்குகளுக்கு பிரச்னை ஏதும் ஏற்படாமல் இருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. காலா படத்திற்கு ஒரு சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com