தமிழ் සිංහල English
Breaking News

கீழே கொட்டிய காபியை மாப் போட்டு துடைத்த பிரதமர்.! வீடியோ !

நெதர்லாந்து பிரதமர் மார்க் ருட்டே   கீழே கொட்டிய காப்பியை தானே மாப் போட்டு சுத்தம் செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பிரதமர் மார்க் ருட்டே சமூகவலைத்தளங்களில் ஹீரோவாக பார்க்கபடும் பிரதமர் ஆவர். பார்க்க மட்டுமில்லை பழகமும் மிகவும் எளிமையானவர் தான் பிரதமர் மார்க் ருட்டே. இந்தியா உட்பட அனைத்து தரப்பு மக்களும் அவரை புகழ்ந்து பலமுறை பேசியுள்ளனர்.

சமீபத்தில் கூட நெதர்லாந்து மன்னரை நேரில் சந்தித்து பேச, பிரதமர்  மார்க் ருட்டே சைக்கிளில் சென்று அனைவரையும்  ஆச்சரியப்பட வைத்தார். இந்நிலையில் தான் பாராளுமன்ற வளாகத்தில்  கீழே கொட்டிய காப்பியை மார்க், அங்கு பணிபுரியும் ஊழியர்களிடம் இருந்து மாப் வாங்கி சுத்தம் செய்யும் வீடியோ பலரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.

நேற்றைய தினம்(5.6.18) பாராளுமன்றத்திற்கு சென்ற மார்க், வளாகத்தில் நுழையும் போது கையில் வைத்திருந்த காபி கப்பை கைதவறி கீழே விட்டார். இதனால் அவர் கையில் இருந்த காபி கீழே சிந்தியது. உடனே அதை துடைக்க உதவியாளர்கள் ஓடோடி வந்தனர். ஆனால்,மார்க் அவர்ளிடம் இருந்த மாப்பை வாங்கி தானே சுத்தம் செய்து எடுத்தார்.

அதுமட்டுமில்லாமல், அந்த மாப்பை எப்படி உயர்த்துவது, கீழே இறக்குவது? என்றும் ஊழியர்களிடம் கேட்டறிந்தார். பிரதமர் தங்களிடம் நின்று பேசுவதை சற்றும் எதிர்ப்பார்க்காத அந்த ஊழியர்கள் அவரிடம் உற்சாகமாக கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் பதில் அளித்தனர். இந்த வீடியோ மூலம் மார்க் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளார்.

மேலும், இந்த வீடியோவை பார்த்த இந்திய மக்கள் பலர், எல்லா தேசத்திற்கும் இதுப்போன்ற பிரதமர் வேண்டும் என்று மறைமுகமாக இந்திய பிரதமர் மோடியை காலாத்து வருகின்றனர்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com