தமிழ் සිංහල English
Breaking News

அரசியல் வியாபாரிகளிடமிருந்து முஸ்லிம்களை பாதுகாக்க ஹக்கீம் , அதாவுல்லா ஒன்றிணைய வேண்டும் .!

பணத்துக்காகவும் , பதவிக்காகவும்  எதுவுமே  அறியாத மக்களை காட்டி அரசியல் வியாபாரம்  நடாத்தும்  சில்லறை வியாபாரிகளிடம்  இருந்து மக்களை பாதுகாக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது .

அரசியல் வியாபாரிகள் தங்களை பிரபல்லியப் படுத்துவதற்காகவேண்டி சில கூலிக்கு மாறடிக்கின்ற எழுத்து குஞ்சிகளை வைத்து புகழ் படுகிறார்கள் . இதனால்   முஸ்லிம்  சமுகம் சீரழிய தொடங்கியுள்ளது .

இலங்கையில்  முஸ்லிம் சமுகம் அச்சத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் .ஒவ்வொரு நாளும்  முஸ்லிம் களின்  பொருளாதாரம் சூறையாடப்பட்டு அழிக்கப்பட்டு வருகின்றது . முஸ்லிம் கள்களின் எதிர்க்காலத்தைப்பற்றி சிந்தீக்க வேண்டிய காலத்தில் இருந்து கொண்டிருக்கின்றோம் முஸ்லிம்களுக்கு எதிராக இரு பக்க இனவாத சக்திகள் ஒன்றிணைந்துள்ளார்கள் .

இவ்வாறான நிலை இருக்கும் போது மக்களால் ஒதுக்கப்பட்ட சிலர் தங்களின் வயிற்றுப்பிழைப்புக்காக வேண்டி உண்மைகளை மறைத்து பொய்களை  பாடுகின்றார்கள் .

இந்த  தீய அரசியல்  வியாபாரி களிடமிருந்து  முஸ்லிகளை  பாதுகாக்க  பகைமைகளை மறந்து  ஹக்கீம் , அதாவுல்லா போன்றோர் ஒன்றிணைந்து புத்தீ ஜீவிகளையும் அரவணைத்து புதிய அரசியல்  கலாச்சாரத்தை  தோற்று விக்க முன்வர வேண்டும் .

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com