தமிழ் සිංහල English
Breaking News

நீட் பரீட்சைக்கு எதிர்ப்பு:போராட்டத்தை முன்னெடுத்த மாணவர்கள் கைது.!

நீட் பரீட்சைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாணவி பிரதீபாவின் மரணத்திற்கு நீதி கோரியும், போராட்டத்தை முன்னெடுத்த மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை தாம்பரத்தில் தமிழக மாணவர்கள் சங்க அமைப்பினரால் இன்று (புதன்கிழமை) இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ரயில் தண்டவாளத்தில் படுத்திருந்து மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்தமையினால், ரயில் பயணத்திற்கு தடை ஏற்பட்டது.

போராட்டம் குறித்து பொலிஸ் தரப்பு தகவல் அறிந்திருக்காத பொருட்டு, செய்தியாளர்கள் பொலிஸிடம் தகவல் வழங்கியுள்ளனர்.

இதனை தொடர்ந்து குறித்த இடத்திற்கு விரைந்த பொலிஸார் போராட்டத்தில் ஈடுபட்டோரை ரயில் தண்டவாளத்திலிருந்து விலகுமாறு வலியுறுத்தியுள்ளனர்.

எனினும் மாணவர்கள்  போராட்டத்தை தொடர்ந்தமையினால்,  பொலிஸார் அவர்களை விரட்டி கைது செய்துள்ளனர்.

 

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com