தமிழ் සිංහල English
Breaking News

துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நடிகர் விஜய் ஆறுதல்

தமிழ்நாடு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த 22-ந் திகதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக புறப்பட்டு சென்றனர். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் பொலிசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

vijay 1

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசனை கொண்ட ஒருநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது. இதையடுத்து நீதிபதி அருணா ஜெகதீசன் நேற்று தூத்துக்குடிக்கு வந்து விசாரணையை தொடங்கினார்.

இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் குடும்பத்துக்கு நடிகர் விஜய் நேற்று நள்ளிரவில் நேரில் சென்று ஆறுதல் கூறினார். அப்போது அவர் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ஆறுதல் கூறியதுடன், நிதியுதவியும் அளித்துள்ளார். ஆர்ப்பாட்டமில்லாமல் விஜய் செய்த இச்செயல் பாராட்டப்பட கூடியதாகும்.

இது தொடர்பான காணொளி தற்போது வைரலாகி வருகிறது.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com