தமிழ் සිංහල English
Breaking News

நல்லாட்சி சட்டம் ஒழுங்கை மிகவும் கேள்விக்குட்படுத்தியுள்ளது.!

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள மூதூர் பிர தேசத்தின் மிகவும் பின்தங்கிய கிராமமான பாட்டாளி புரத்தில் பெண்ணெருவர் துஸ்பிரயோகப்படு த்தப்பட்ட துடன் அவரை கழுத்தறுத்து கொலை செய்ய முயற்சித்த சம்பவம் தொடர்பாக பொலிஸ் மற்றும் நீதித்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என திருகோணமலை மாவட்டத்தில் செயற் படும் பெண்கள் அமைப்பு பிரதிநிதிகள் கோரிக்கையை விடுத்துள்ளனர்.

இதுகுறித்துத் தெரிவித்துள்ள அவர்கள்,

குறித்த பெண், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வேளையில் கழுத்தறுபட்ட நிலையில் ஆபத்தான சூழலில் மீட்கப்பட்டிருந்தார்.

அதன் பின்னர் பொலிசாரின் உதவியுடன் தோப்பூர் வைத்தியசாலை ஊடாக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது.

அவரால் பேசமுடியாத நிலமை உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்விடயத்தில் பல இளைஞர்கள் பங்குகொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

குறித்த பெண்ணை அவர்கள் பலாத்காரம் செய்து இறுதியில் கழுத்தை அறுத்து கொலை செய்யவும் துணிந்துள்ளார்கள். இந்த நல்லாட்சி என்று சொல்லப்படுகின்ற சூழலில் இந்நிகழ்வானது சட்டம் ஒழுங்கை மிகவும் கேள்விக்குட்படுத்தியுள்ளது.

எனவே இது விடயத்தில் பொலிசாரும் நீதித்துறையும் விரைந்து நேர்மையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். 5 பிள்ளைகளின் தயான குறித்த விதவைப்பெண்ணை பலர்சேர்ந்து இவ்வாறு சிதைத்து அவரைக் கொல்லத் துணிந்துள்ளமை பெண்களின் பாதுகாப்புக்குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது. என குறித்த அமைப்புக்களின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com