தமிழ் සිංහල English
Breaking News

குடிபோதையில் விபத்து , விஜய் டிவி பெண் பிரபலத்தை வெளுத்து வாங்கிய பொதுமக்கள்..!வைரலாகும் வீடியோ

விஜய் தொலைக்காட்சியில் திறமைகளை வெளிகாட்ட பல சந்தர்ப்பங்களை வழங்கி மக்களிடையே முதன்மை தொலைக்காட்சியாக வலம் வருவது  சிறப்புக்குரிய விடயமாகும்.

இதன்போது மக்களுக்கு பல வாய்ப்புக்களை உருவாக்கி களம் அமைத்து கொடுத்து சினிமா துறையிலும் ஜொலிப்பதற்கு விஜய் தொலைக்காட்சியின் உழைப்பு பாராட்டுவதற்குரியதாகும்.

அந்தவகையில் தற்போது விஜய் தொலைக்காட்சியினூடாக பிரபலமடைந்த இண்டியா டான்ஸ் மற்றும் விஜய் டிவியின் ஜோடி நம்பர் வன்னில் நடனமாடிய சுனிதா அசாம் மதுபானம் அருந்திய நிலையில் தனது காரை செலுத்தி விபத்துக்குள்ளாகிய சம்பவம் வைரலாக பரவி வருகின்றது.

whatsapp-image-2018-05-31-at-24901-pm-500x250

விபத்திற்கு பின் போதையில் மக்களிடம் சண்டை போட்டதுடன் காரில் இருந்து இறங்காமல் வாக்குவாதம் நடத்தியிருக்கிறார். காரை செலுத்தி விபத்துக்குள்ளாக்கியத்தில்லாமல் பொது மக்களிடம் ஏன்? ஏன்? என போதையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதன்போது மக்களும் ”காரை ஓட்டிட்டு வந்தியா? இல்ல உட்கார்ந்துட்டு வந்தியா?” என மக்களும் கேள்வி எழுப்ப கீழே இறங்க கேட்டு மக்கள் சண்டைபோட்டுள்ளனர்.

பின் வந்த காவல்துறை அதிகாரி அவரை உட்கார வைத்து போக சொல்லி அனுப்பி வைத்திருக்கிறார்.

அங்கு கூடிய மக்கள் இச்சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்துள்ளதுடன், இந்த சம்பவமானது சமூக வளைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com