தமிழ் සිංහල English
Breaking News

அமெரிக்க சிறையில் டாக்டர் ஹாபியா சித்தீகி மரணம் அடைந்திருக்கலாம் என அச்சம் : பாகிஸ்தான் மக்கள் மத்தியில் பதற்றம்!

அமெரிக்க சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் விஞ்ஞானி டாக்டர் ஹாபியா சித்தீகி மரணம் அடைந்திருக்கலாம் என்ற செய்தி 2018 மார்ச் 29 முதல் பரவத் தொடங்கியதை அடுத்து பாகிஸ்தான் மக்கள் நிம்மதி இழந்துள்ளனர். பாகிஸ்தான் அரசாங்கம் இதை தெளிவு படுத்த வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

டாகடர் ஹாபியாவுடன் தாங்கள் நீண்ட நாற்களாகத் தொடர்பில் இல்லை என்றும் அவர் எங்கே உள்ளார் என்பது பற்றி தமக்கு எதுவும் தெரியாது என்றும் ஹாபியாவின் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

யார் இந்த டாக்டர் ஹாபியா சித்தீகி ? அவர் செய்த குற்றம் தான் என்ன?

பாகிஸ்தான் பிரஜையான டாக்டர் ஹாபியா 1972 மார்ச் 2ல் கராச்சி நகரில் பாகிஸ்தானின் கல்விமான்கள் குடும்பம் ஒன்றில் பிறந்தவர். காலஞ்சென்ற அவரது தந்தையான சாலே சித்தீகி பிரிட்டனில் பயிற்சி பெற்ற ஒரு நரம்பியல் சத்திர சிகிச்சை நிபுணர். அவரின் தாய் இஸ்மேத்; சமூக சேவைகள் பலவற்றிலும், தர்ம ஸ்தாபனங்கள் பலவற்றிலும் தொடர்புடைய ஒரு இஸ்லாமிய ஆசிரியை. பாகிஸ்தானின் அரசியல் மற்றும் சமூக வட்டாரத்தில் மிகவும் பிரபலமானவர். பாகிஸ்தான் பாராளுமன்றத்தின் ஊறுப்பினராகவும் அவர் இருந்துள்ளார்.

ஹாபியா சாம்பியாவில் தனது ஆரம்ப கல்வியையும் பின்னர் கராச்சியில் இரண்டாம் நிலை கல்வியையும் முடித்துக் கொண்டு அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் உள்ள ஹொஸ்டனில் மாணவர்களுக்கான விஸாவில் 1990ல் குடியேறி அங்கிருந்த தனது சகோதரருடன் இணைந்து கொண்டார். அவர் ஹொஸ்டன் பல்கலைக்கழகத்தில் மூன்று பருவ காலங்கள் பயின்றார், பின்னர் முழுமையான ஒரு புலமைப் பரிசில் பெற்று மசாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் இணைந்து கொண்டார். 1992ல் பல்கலைக்கழக இரண்டாம் ஆண்டு மாணவியாக சித்தீகி இருந்த போது தனது ‘பாகிஸ்தானை ‘இஸ்லாமியமயமாக்கல்’ பெண்கள் மீதான அதன் தாக்கம்’ என்ற ஆய்வு அறிக்கைக்காக அந்தப் பல்கலைக் கழகத்தின் கீர்த்திமிக்க விருதான கரோல் எல் வில்ஸன் விருதையும் வென்றார். உயிரியல், மானுடவியல், தொல்பொருளியல் ஆகிய மூன்று துறைகளிலும் அவர் ஆர்வம் காட்டினார். 1992ல் அவர் உயிரியல் துறையில் பட்டம் பெற்றார்.

மசாசூசெட்ஸிலேயே அவர் தொடர்ந்து வசித்து வந்தார். 2002ல் அவர் பாகிஸ்தான் திரும்பினார். அங்கிருந்து தான் அவரது துயரங்கள் தொடங்கின.

அவரது முதலாவது கணவனின் மாமன் முறையானவர் தான் காலித் ஷேக் முஹம்மத். செப்டம்பர் 11 அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதலின் பிரதான சூத்திரதாரி இவர் என்பது தான் அவருக்கு எதிரான குற்றச்சாட்டு. ஆனால் இந்தத் தாக்குதலை உண்மையில் திட்டமிட்டவர்கள் இஸ்ரேலிய புலனாய்வு பிரிவான மொஸாட் என்பது இப்போது பல்வேறு தகவல்கள் மூலம் வெளிவந்துள்ள உண்மையாகும்.

2003 மார்ச்சில் காலித் ஷேக் பாகிஸ்தான் புலனாய்வு சேவையான ஐளுஐ மூலம் ராவல்பிண்டி நகரில் வைத்து கைது செய்யப்பட்டார். இவர் 183 தடவைகள் தண்ணீரைக் கொண்டு மேற்கொள்ளப்படும் சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சித்திரவதைகளின் போது அவர் ஹாபியா சித்தீகியின் பெயரை முணுமுணுத்துள்ளார்.

2003 மார்ச் 30ல் ஹாபியா தனது மகனான ஆறு வயதான அஹமத், மகளான நான்கு வயதான மர்யம், கடைசி மகனான ஆறு மாத குழந்தையான சுலைமான் ஆகிய தனது மூன்று பிள்ளைகளுடன் இஸ்லாமாபாத்தில் உள்ள தனது மாமனாரை பார்வையிட விமானத்தில் செல்லும் நோக்கில் கராச்சி விமான நிலையத்துக்குச் சென்றார். ஆனால் அவர்கள் இந்தப் பயணத்தை மேற்கொள்ள வில்லை. அதன் பிறகு அவர்கள் காணாமல் போய்விட்டனர்.
ஐந்து வருடங்கள் கழித்து 2008ல் ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு தடுப்பு முகாமில் அவர் இருக்கின்றமை தெரியவந்தது. அது வரை அவருக்கு என்ன நடந்தது என்பதே தெரியவில்லை. அமெரிக்க பாகிஸ்தான் உளவுப் படையினரால் தான் கடத்தப்பட்டதாக அவர் அங்கிருந்து தெரிவித்தார். தான் கடத்தப்பட்ட போது தனது ஆண் குழந்தைகளில் ஒன்று மரணம் அடைந்ததாகவும் அவர் கூறினார்.

தனது தாய் வாகனம் ஒன்றை ஓட்டிச் சென்ற போது பல வாகனங்கள் அதை முந்தி வந்து அதில் இருந்தவர்களால் தாங்கள் கடத்தப்பட்டதாக மகன் அஹமத் தெரிவித்துள்ளார். இந்த கடத்தலின் போது தனது இளைய சகோதரன் மரணம் அடைந்ததாகவும் அவனது சடலம் தெருவோரத்தில் வீசப்பட்டதாகவும் அஹமத் தெரிவித்துள்ளான். தங்களைக் கடத்தியவர்களிடம் அவர்கள் யார் என்று விசாரிக்கக் கூட தாங்கள் அச்சம் கொண்டதாகவும் அவர்களில் அமெரிக்கர்களும் பாகிஸ்தானியர்களும் இருந்ததாகவும், தான் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது அமெரிக்கர்களால் தாக்கப்பட்டதாகவும் அந்தச் சிறுவன் மேலும் குறிப்பிட்டுள்ளான். கடைசியில் பாகிஸ்தானில் உள்ள சிறுவர் சிறைச்சாலை ஒன்றுக்கு அஹமத் அனுப்பப்பட்டுள்ளான். ஆனால் சிறைக்கு அனுப்பும் அளவுக்கு அந்தச் சிறுவன் செய்த குற்றம் என்ன என்பதுதான் தெரியவில்லை.

தனது எஞ்சிய பிள்ளைள் இருவரும் தன்னிடம் இருந்து பிரிக்கப்பட்டதாகவும் தனது கையில் தோல் பகுதியில்; ஒரு ஊசி போடப்பட்டது மட்டும் தான் கடைசியாக தனது நினைவில் இருப்பதாகவும் ஹாபியா சித்தீகி அன்று தெரிவித்திருந்தார். உணர்வு வந்து பார்த்தபோது அவர் ஒரு சிறைக் கூடத்தில் காணப்பட்டுள்ளார். அங்கு விமானங்களின் ஓசைகளைத் தான் கேட்டதாகவும் ஒருவேளை அது ஒரு இராணுவ தளமாக இருக்கலாம் என தான் நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஐந்து வருடங்களுக்கு மேலாக தான் தனிமையில் அடைத்து வைக்கப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்கர்களாகிய அதே நபர்கள் தான் மீண்டும் மீண்டும் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் சீருடையோ அல்லது முகமூடியோ அணிந்திருக்க வில்லை. அவரது பிள்ளைகள் அச்சத்தோடு கதறிப் புலம்பும் குரல்கள் பதிவு செய்யப்பட்ட நாடாவை அவர்கள் அவ்வப்போது விசாரணைகளின் போது போட்டுக் காட்டி உள்ளனர். மிகவும் மோசமான குண்டுகளை அவர் தயாரித்ததாகவும் அழிவு தரும் வைரஸ்களை பாவித்து தாக்குதல்களை நடத்தியதாகவும் நூற்றுக் கணக்கான பக்கங்களை எழுதி ஒப்பிமிடுமாறு நிர்ப்பந்திக்கப் பட்டதாகவும் ஹாபியா விரிவான தகவல்களை வெளியிட்டிருந்தார்.

2010ல் குரல் பதிவு செய்யப்படட ஒரு சாட்சியத்தை சிந்து மாநில பொலிஸ் அத்தியட்சகர் வெளியிட்டிருந்தார். அது அமெரிக்க ஊடகவியலாளரான ஸ்டீபன் லென்ட்மனின் குரல் பதிவு. அதில் அவர் 2003 மார்ச்சில் ஹாபியாவையும் அவரது பிள்ளைளையும் கடத்தும் முயற்சியில் தானும் நேரடியாகப் பங்கேற்றிருந்ததாகத் தெரிவித்திருந்தார். உள்ளுர் கராச்சி அதிகாரிகளும் இதில் பங்கேற்றிருந்தனர். பாகிஸ்தான் புலனாய்வு சேவையான ஐளுஐ அமெரிக்காவின் ஊஐயு மற்றும் குடீஐ அதிகாரிகளும் இதில் சம்பந்தப்பட்டிருந்ததாக அவர் அந்த சாட்சியத்தில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கர்கள் அவரை ஆப்கானிஸ்தானின் பக்ராம் சிறையில் (குவன்தனாமோவுக்கு ஈடான் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க சிறை) மிக மோசமான நிலையில் அடைத்து வைத்திருந்தனர். இந்த சிறையில் ஏற்கனவே தடுத்து வைக்கப்பட்டிருந்த பின்னர் விடுதலையான சில கைதிகள் சித்தீகி அங்கு உள்ளதாக ஊடகங்களுக்கு தகவல்களை வெளியிட்ட பின்னர் தான் அமெரிக்க அதிகாரிகள் அவர் அங்குள்ளதாக ஒப்புக் கொண்டனர். அவர் ஐந்து வருடங்களாக தொடர் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். ஒவ்வொரு நாளும் பாலியல் ரீதியாகவும் பௌதிக ரீதியாகவும் சித்திரவதைக்கும் துஷ்பிரயோகத்துக்கும் ஆளாக்கப்பட்டுள்ளார். அவரது கடந்த கால வாழ்வில் ஏதாவது குற்றங்கள் தவறுகள் உள்ளனவா என்பதைக் கண்டு பிடிக்க அமெரிக்கர்கள் தம்மிடம் உள்ள சிறப்பு வளங்கள் அனைத்தையும் பயன்படுத்தினர். ஆனால் அவ்வாறான எந்த ஒரு தடயத்தையும் அவர்களால் கண்டு பிடிக்க முடியவில்லை. பின்னர் அவரிடம் இருந்து தாங்கள் எப்படி விடுபடுவது என்பது அமெரிக்கர்களுக்கு பெரும் பிரச்சினை ஆகிவிட்டது.

பாகிஸ்தானில் இடம்பெற்ற ஒரு ஊடக சந்திப்பில் பிரிட்டிஷ் ஊடகவியலாளர் ஒருவர் பக்ராம் சிறையில் 650வது இலக்க கைதி. ஒரு சாம்பல்; பெண் பேய் என ஒரு கதையை கட்டவிழத்து விட்டார். அதன் பிறகு அது டாக்டர் ஹாபியா சித்தீகி என்பதும், அவர் நவீன உலக வரலாற்றில் மிக மோசமான சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்ட துரதிஷ்டவசமான பெண் என்பதும் தெரிய வந்தது.

அதன் பிறகு இந்த கைதி எண் 650 உலக ஊடகங்கள் வாயிலாக பிரதானமாகப் பேசப்பட்டது. பல பாகிஸ்தான் நகரங்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதிகளில் இறங்கி போராட்டங்களில் ஈடுபடத் தொடங்கினர். சில மேலைத்தேச நாடுகளிலும் அவரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோஷங்கள் எழத் தொடங்கின.

ஆனால் சித்தீகி கடத்தப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ள விடயத்தில் தங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று அப்பட்டமாகப் பொய் உரைத்து அnரிக்கா அதை மறுத்தது. ஆனால் 2012 ஜனவரி 23ல் அப்போதைய ஜனாதிபதி ஜெனரல் பர்வேஷ் முஷர்hபின் வெளிவிவகார அமைச்சர் குர்ஷிட் கஷுரி மிகவும் வெற்கக் கேடான விதத்தில் டாக்டர். ஹாபியா சித்தீகியை கடத்தியதையும் அவரை அமெரிக்காவிடம் ஒப்படைத்ததையும் பிகிரங்கமாக ஏற்றுக் கொண்டார். அதற்காக அவர் வருத்தமும் தெரிவித்தார். பாகிஸ்தானிய ஆளும் வர்க்கம் அமெரிக்கர்களை திருப்திப்படுத்தவும், சந்தோஷப்படுத்தவும் தனது சொந்த மக்களையே கொன்று குவிப்பது ஒன்றும் புதிய விடயம் அல்ல. செப்டம்பர் 11 தாக்குதலின் பின் பர்வேஷ் முஷர்ரபின் ஆட்சியின் கீழ் இது தாராளமாக நடந்துள்ளது.

பக்ராம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது கைவிடப்பட்ட நிலையில் இருந்த ரைபிள் ஒன்றை எடுத்து தங்களை நோக்கி சித்தீகி சுடத் தொடங்கினார் என்று அமெரிக்க அதிகாரிகள் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தனர். ஆனால் தான் ஒரு துப்பாக்கியை தொட்டது கூட கிடையாது என சித்தீகி மறுத்துள்ளார். அதேபோல் தான் கூச்சலிட்டதும் இல்லை யாரையும் அச்சுறுத்தியதும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஒரு ஜன்னலுக்குப் பின்னால் யாராவது இருக்கின்றார்களா எனறு தான் பார்க்க முயன்ற சம்பவத்தை அடிப்படையாக வைத்தே தன்மீது இந்தக் குற்றச்சாட்டு சோடிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பின்னர் சித்தீகியின் உடல் நிலை மிக மோசமடைந்த நிலையில் அங்கிருந்து ஹெலிகொப்டர் மூலம் அவர் சிகிசசைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்ட்டார். ஆஸ்பத்திரியில் அவருக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவரது உடல்நிலை ஒருவாறு தேறிய பின் அமெரிக்காவின் கைப் பொம்மையான ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீட் கர்ஸாயி அவரை மீண்டும் அமெரிக்கர்களிடம் ஒப்படைக்க சம்மதம் தெரிவித்தார். அத்தோடு மேலதிக விசாரணைகளுக்காக அவரை அமெரிக்காவுக்கு கொண்டு செல்லவும் கர்ஸாயி அனுமதி வழங்கினார்.
மீண்டும் 18 மாதகாலம் அnரிக்காவில் தடுத்து வைக்கப்பட்ட பின் 2008 செப்டம்பர் 3ல் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றம் 86 வருட சிறைத் தண்டனையை விதித்தது. இவர் மீது பயங்கரவாத குற்றம் சாட்டப்படவில்லை. யாரையும் கொலை செய்தார், காயம் விளைவித்தார் அல்லது யாருக்கும் தீங்கு விளைவித்தார் என்ற ரீதியில் கூட குற்றங்கள் எதுவும் சாட்டப்படவில்லை. ஆனால் தண்டனை மட்டும் 86 வருட காலமாக விதிக்கப்பட்டது.

இந்த நீதின்ற விசாரணையின் போது ஆஜரான சில சட்டத்தரணிகளை சித்தீகி கடுமையாக எதிர்த்தார். காரணம் அவர்கள் எல்லோருமே யூதப் பின்னணி கொண்டவர்கள். யூதர்கள் கொடுமையானவர்கள், நம்பிக்கைத் துரோகிகள், முதுகில் குத்துபவர்கள் எனவும் இந்த வழக்கு விசாணையில் அவர்கள் சம்பந்தப்படுவதை தான் விரும்பவில்லை என்றும் சித்தீகி நீதிமன்றத்துக்கு எழுத்து மூலம் அறிவித்தார். இந்த வழக்கு முழுக்க முழுக்க யூதப் பின்னணியில் சோடிக்கப்பட்ட ஒரு வழக்கு என்றும் அதில் எந்த வகையிலும் யூதர்கள் சம்பந்தப் படக் கூடாது. ஜுரிமார் சபையில் கூட அவர்கள் இருக்கக் கூடாது என சித்தீகி வலியுறுத்தினார்.

இந்த வழக்கு அமெரிக்க அரசியல் சாசனத்தின் ஆறாவது திருத்தத்தை முற்று முழுதாக மீறுகின்ற ஒரு செயல். நீதித்துறையில் இழைக்கப்பட்டுள்ள மிகப் பெரிய தவறு என பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆறு பேர் சுட்டிக்காட்டினர். ஐக்கிய நாடுகள் சபை உறுப்பினர் என்ற ரீதியிலும் அnரிக்கா நீதித்துறையில் இவ்வாறான ஒரு தவறை செய்திருக்க் கூடாது என்றும் அவர்கள் கூறினர். சித்தீகி விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர். சித்தீகி ஆயுத் ஒன்றைக் கையாண்டார் என்ற ரீதியில் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு விஞ்ஞன ரீதியாகவோ அல்லது தடயவியல் ரீதியாகவோ எந்த ஆதாரமும் அற்றது என அவர்கள் பராக் ஒபாமாவுக்கு கடிதமும் எழுதினர். ஆனால் எல்லாமே செவிடன் காதில் ஊதிய சங்காகியது.

பாகிஸ்தானிய மக்களின் பார்வையில் சித்தீகி அமெரிக்காவால் மோசமாக சித்திரவதை செய்யப்பட்ட பரிதாபத்துக்குரிய ஒரு பெண். அவர் அந்த தேசத்தின் மகள் என முன்னாள் பிரதம மந்திரி யூசுப் கிலானி வர்ணித்துள்ளார். அவரை உடனடியாக விடுதலை செய்ய அரசாங்கம் ராஜதந்திர ரீதியான நடவடிக்கைகள் உற்பட எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என பாகிஸ்தான் செனட் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

பாகிஸ்தானின் ‘த நேஷன்’ பத்திரிகையின் ஆசிரியர் இது பற்றிக் குறிப்பிடுகையில் செப்டம்பர் 11 தாக்குதலுக்கு பழிவாங்கும் அமெரிக்கர்களின் எண்ணங்களைப் புரிந்து கொண்ட எவருக்கும் இந்தத் தீர்ப்பு ஆச்சரியம் அளிக்கப் போவதில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

சமய விசுவாசம், தேசியம், இனம் என எல்லா வித்தியாசங்களையும் கடந்து மனச்சாட்சி மிக்க உலக மக்களின் உள்ளங்களில் டாக்டர். சித்தீகி தனி இடம் பிடித்துள்ளார். அவர் சிறை வைக்கப்பட்டுள்ள விதம் பற்றி பாரிய அளவிலான கண்டனங்கள் உலக அளவில் எழுந்துள்ளன. பாகிஸ்தானில் காணாமல் போன மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட பலரின் மர்மங்கள் குறித்து பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு அமெரிக்காவைச் சார்ந்துள்ளது.

முஸ்லிம் உலக சமூகத்தின் மகளாக ஹாபியா சித்தீகி நோக்கப்படுகின்றார். தன்னை சித்திரவதை செய்தவர்களையும் தனக்கு கொடுமையான தீர்ப்பு வழங்கிய நீதிபதியையும் கூட தான் மன்னித்து விட்டதாக அவர் அறிவிததுள்ளமையே இந்த அன்புக்கு காரணம். அச்சம், வெறுப்பு, அநீதி, பாரபட்சம், சித்திரவதை என எல்லா தீமைகளுக்கும் மத்தியில் டாக்டர் சித்தீகி மனிதாபிமானத்தின் ஒரு அடையாளமாக நோக்கப்படுகின்றார்.

டாக்டர் ஹாபியாவின் சகோதரி டாக்டர் பௌஸியா அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் சின்தியா மெக்கன்னி மற்றும் சர்வதேச செயற்பாட்டு நிலைய இணை பணிப்பாளர் சாரா பிளன்டர்ஸ் சகிதம் லாகூர் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் ஹாபியாவின் விடுதலைக்காக இடம்பெற்ற ஒரு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட போது எடுத்த படம்.

லத்தீப் பாரூக்

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com