தமிழ் සිංහල English
Breaking News

டோனியின் உடலமைப்பு பாருங்கள்.!

ஜூன் 27 மற்றும் 29-ம் தேதிகளில் இந்தப் போட்டி நடக்கிறது. இந்தத் தொடர்களுக்கு முன்னணி வீரர்களோடு இளம் வீரர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதோடு மேற்கிந்திய அணியுடன் விளையாடும் இந்திய ஏ அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் பங்கேற்கும் வீரர்களுக்கு பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் உடல் தகுதி தேர்வு ஜூன் 5 ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை நடக்கிறது.

சுமார் 40 வீரர்கள் இந்த உடற் தகுதித் தேர்வில் பங்கேற்கின்றனர். இதில் யோ யோ டெஸ்ட் கட்டாயம் என்பதால் வீரர்கள் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்

இந்நிலையில், பதினோறாவது ஐபிஎல் சாம்பியன் கோப்பையை வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிட்னஸ் பயிற்சியாளராக இருந்த ராம்ஜி ஸ்ரீனிவாசன் டோனியை புகழ்ந்துள்ளார்.

மற்ற வீரர்களை விட இப்போதும், ஃபிட்னஸில் டோனி சிறப்பாக இருக்கிறார். மற்ற வீரர்களுக்கு உதாரணமாக இருக்கிறார். 36 வயதிலும் அவரது உடலமைப்பை பாருங்கள்.

அவர் வருடம் முழுவதும் விளையாடுவதில்லை என்றாலும் பிட்னஸில் கச்சிதமாக இருக்கிறார். இளம் வீரர்கள், அவரைப் பின்பற்றவேண்டும் என கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி, ஜூலை மாதம் இங்கிலாந்து செல்கிறது. அங்கு 3 டி20 தொடர், 3 ஒரு நாள் போட்டி, 5 டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் பங்கேற்கிறது. ஜூலை 3-ம் தேதியில் இருந்து செப்டம்பர் 11-ம் தேதி வரை அங்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com