தமிழ் සිංහල English
Breaking News

இலங்கையை உலுக்கிய காதல்! பரிதாபமாக உயிரிழந்த காதலி – உடல் அவயங்களை இழந்த காதலன்.!

காலியில் பாடசாலை மாணவர்கள் இருவர் தற்கொலை செய்து கொள்ள முயன்றமை அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

பாடசாலை மாணவி ஒருவரும் மாணவன் ஒருவரும் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளனர்.

இந்த தற்கொலை முயற்சியில் பாடசாலை மாணவி உயிரிழந்த நிலையில் மாணவன் படுகாயமடைந்து வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டார்.கொழும்பில் இருந்து காலி நோக்கி பயணித்த ரயிலில் 15 வயதுடைய மாணவி மற்றும் மாணவனே இவ்வாறு தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளனர்.

ஹிக்கடுவ, வெவல்கொட சந்தியில் கடந்த முதலாம் திகதி இரவு 11 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.இந்த அனர்த்தத்தில் 15 வயதான சானி சசிகலா என்ற மாதம்பே, அம்பலங்கொட பிரதேசத்தை சேர்ந்த மாணவியே உயிரிழந்துள்ளார்.

விபத்தில் காயமடைந்த மாணவனின் ஒரு கை உடலை விட்டு பிரிந்துள்ள நிலையில், முழங்காலுக்கு கீழ் கால்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.சம்பவம் தொடர்பில் உயிரிழந்த மாணவியின் தாயார் மனோஷா ஜயராணி டி சில்வப சாட்சி வழங்கியுள்ளார்.

“உயிரிழந்திருப்பது எனது ஒரே மகள். அவர் 10ஆம் வகுப்பில் கல்வி கற்கின்றார். கற்கை நடவடிக்கைகளில் சிறந்த நிலையில் காணப்பட்டார். கடந்த காலங்களில் மகளிடம் கையடக்க தொலைபேசி ஒன்று இருந்ததனை அவதானித்தேன். நான் இது தொடர்பில் அவரிடம் கேட்ட போது மதுசங்க என்ற காதலன் இருப்பதாக கூறினார்.

பின்னர் நான் அவரை எச்சரித்தேன். தொலைபேசியையும் அவரிடம் இருந்து வாங்கினேன். பின்னர் 31ஆம் திகதி இரவு மகளின் கையில் இன்னுமொரு தொலைபேசியை கண்டேன். நான் அதனையும் எடுத்தேன். முதலாம் திகதி காலை அவர் பாடசாலை செல்ல ஆயத்தமாகினார். பாடசாலை சீருடைக்குள் கருப்பு நிற ஆடை ஒன்றை அவர் அணிந்திருந்தார்.

அதன் கண்ட நான் கண்டித்தேன். மகள் கறுப்பு நிற ஆடையை நீக்கினார். பின்னர் பாடசாலைக்கு சென்றார். கணவர் வீட்டிற்கு வந்தவுடன் நான் இந்த விடயங்களை அவரிடம் கூறினேன். இதனால் கணவர் பாடசாலைக்கு சென்றுள்ளார். பாடசாலை ஆசிரியருடன் பேசும் மகள் பாடசாலைக்கு வரவில்லை என்பதனை அறிந்து கொண்டோம். மகளை தேட ஆரம்பித்தோம். கஹவ சந்தியில் உள்ள கடற்பரையில் அவரது பாடசாலை புத்தக பையை மீட்டோம்.

கணவர் மகளை தேடிச் சென்றார். இதன் போது மகள் மற்றும் சிறுவன் ஒருவர் ரயிலில் பாய்ந்த விடயத்தை அறிந்து கொண்டோம்… என தாயரா் குறிப்பிட்டுள்ளார்.சிறுவர்களான இருவரும் தற்கொலைக்கு முயன்றமை அந்தப் பகுதி மக்களிடமே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com