தமிழ் සිංහල English
Breaking News

முஸ்லிம்களின் ஆதரவு தனக்கு பூரணமாக கிடைக்கும்.!

முள்ளிவாய்க்கால் நினைவு தினம் பொது மக்களை நினைவுகூருவதற்கானதல்ல, மாறாக பேரினவாதத்தையும், பிரிவினவா தத்தையும் தூண்டும் செயல் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

முள்ளரிவாய்க்கால் நினைவேந்தலில் கலந்துக் கொண்டவர்களுக்கு இராணுவத்தினர் குளிர்பானம் வழங்கியமை குறித்து வானொலி நிகழ்ச்சியொன்றில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துக் கொண்டவர்களுக்கு குளிர்பானம் வழங்கும் செயற்பாடு, இராணுவத்தினரின் தான்தோன்றித்தனமான செயற்பாடா அல்லது அரசாங்கத்தின் தேவையை பூர்த்தி செய்வதற்காக முன்னெடுக்கப்பட்டதா என்பது தெரியவில்லை.

ஆனால், முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னெடுப்பதற்கோ அல்லது அதில் பங்கேற்றவர்களுக்கு குளிர்பானம் வழங்கவோ அரசாங்கம் அனுமதியளித்திருக்கக் கூடாது.

முள்ளிவாய்க்கால் நினைவு, பொதுமக்களை நினைவுகூருவதற்கானதல்ல. மாறாக பேரினவாதத்தை தூண்டும் செயற்பாடாகவே இது அமைந்துள்ளது” எனத் தெரிவித்தார்.

இதேவேளை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து கருத்து பகிர்ந்துக்கொண்ட அவர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பரிந்துரைத்தால், பசில் ராஜபக்ஷவின் ஆதரவுடன் தேர்தலில் போட்டியிடுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு போட்டியிடும் பட்சத்தில் சிறுபான்மையினமான முஸ்லிம்களின் ஆதரவு தனக்கு பூரணமாக கிடைக்கும் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளதுடன், கடந்த காலத்தில் மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் தோல்விக்கு சிறுபான்மையினரின் ஆதரவின்மையே காரணம் என்றும் அவர் நினைவுபடுத்தினார்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com