தமிழ் සිංහල English
Breaking News

தேயிலை முகவர்கள் விடுத்துள்ள செய்தி.!

இலங்கையில் தாக்கம் செலுத்தியுள்ள அசாதாரண வானிலையின் காரண மாக, தேயிலை உற்பத்தி குறை வடையலாம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

தேயிலை முகவர்கள் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது சர்வதேச சந்தையில் தேயிலைக்கான விலை குறைவடைந்திருக்கும் அதேநேரம், சீரற்ற வானிலையால் தேயிலை உற்பத்தியின் அளவும் குறைவடையும் என்று தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக தரம் வாய்ந்த மேல்நாட்டு பிஒபி-பிஒபிஎஃப் தேயிலையின் விலையும், கிலோ ஒன்றுக்கு 20 தொடக்கம் 40 ரூபாவால் வீழ்ச்சி அடைந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

எனினும் அதற்கு அடுத்ததரத் தேயிலையின் விலை 20 முதல் 40 ரூபாவால் அதிகரித்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் உற்பத்தியாகின்ற தேயிலையின் விலை 40-60 ரூபாவாலும், ஊவா பிராந்தியத்தில் உற்பத்தியாகின்ற தேயிலையின் விலை 30-50 ரூபாவாலும் வீழ்ச்சியடைந்திருப்பதாகவும் தேயிலை முகவர்கள் தெரிவிக்கின்றனர்.

அதேநேரம், தேயிலை உள்ளிட்ட பெருந்தோட்ட தொழிற்துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கான வேதன சீராக்கல் குறித்த கூட்டு உடன்படிக்கை பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com