தமிழ் සිංහල English
Breaking News

மலையக மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டதும் இன அழிப்பே: சிவாஜிலிங்கம்!

தமிழர் தாயகத்தில் இன அழிப்பு நடந்ததை அமைச்சர் மனோ கணேசனுக்கு கூற முடியாவிட்டாலும், அங்கு நடைபெற்றது இன அழிப்பே என்பதை நாம் ஆணித்தரமாக கூறுவோம் என வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

மலையக மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டதும் இன அழிப்பின் ஒரு அங்கமே என்பதை மனோ கணேசன் புரிந்துகொள்ள வேண்டுமென சிவாஜிலிங்கம் மேலும் தெரிவித்துள்ளார்.

சிவாஜிலிங்கத்தை கோமாளி என அமைச்சர் மனோ கணேசன் விமர்சித்திருந்தார். இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற செய்தியளார் சந்திப்பில் அதற்கு பதில் வழங்கும் வகையில் சிவாஜிலிங்கம் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தான் ஏறிவந்த ஏணியை அமைச்சர் மனோ கணேசன் எட்டி உதைத்துவிட்டதாக தெரிவித்த சிவாஜிலிங்கம், தன்னாலும் மனோ கணேசனை விமர்ச்சிக்க முடியுமென தெரிவித்தார். எனினும், அவ்வாறு விமர்சிப்பது மலையக மக்களையும் புண்படுத்தும் என்பதாலேயே அவ்வாறு செய்யவில்லையெனக் குறிப்பிட்டார். எனினும், மீண்டும் தன்னை விமர்சித்தால், மனோவின் கடந்த காலத்தை தூசு தட்டுவேன் என சிவாஜிலிங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com