தமிழ் සිංහල English
Breaking News

முஸ்லிம் அமைச்சர்கள் வாய்மூடி மெளனம்.!

இலங்கை அரசு நாட்டு முஸ்லிங்களுக்கு பல்வேறு சாதகமான மத. சமய சலுகைகளை வழங்கியிருப்பது மறுக்கமுடியாத உண்மையாகும்!.

அதற்காகப் பாடுபட்ட நமது முன்னோர்களுக்கு அல்லாஹ் மகத்தான கூலிகளை என்றென்றும் வழங்குவானாக.இதில் புனித ரமளான் காலத்தில் பாடசாலைவிடுமுறை* முக்கியமான தொன்றாகும்.·         பாவம். பட்டினியில் பாடசாலைக்கு வருகிறார்கள்.·         காலையில் வருவதும் பகலில் வீடு செல்வதும் இதற்காகப்  பிரயாணிப்பதும் கஷ்டத்தை ஏற்படுத்தும்·         சிரமங்களை எதிர்நோக்கக்கூடாது·

    வீட்டில் ஓய்வெடுக்கட்டும்·         மதரீதியான அனுஷ்டானங்களில் ஈடுபடட்டும்·         மதத்தைப் பூரணமாகப் பின்பற்றட்டும்போன்ற மற்றும் பல்வேறு காரணிகளை வைத்து அரசாங்கம் புனித ரமளான் காலத்தில் பாடசாலை விடுமுறையை வழங்கியிருக்கலாம்.ஆனால் நாமோ கிடைத்த லீவை பாடம் படிப்பு மேலதிக வகுப்புக்கள் என நோன்பில் நாள்தோறும் நகர்வலம் வருகிறோம்.கிடைத்த லீவை படிப்புக்கு என்று பெற்றோரும் மாணவர்களும் ஆசிரியர்களும் சஹர் முதல் தராவீஹ் வரை நேரத்தை விரயமாக்கினால்?…….இதைச் சொன்னால் ஆயிரமாயிரம் ஆக்ரோஷமாகன கருத்துக்களைப் பதிவிட நம்மவர்கள் பலரும் வழமைபோல் தயாராயிருப்பர்.

என்ன சொன்னாலும் அடுத்தநாள் பாடசாலை லீவு என்ற நம்பிக்கையிலேதான் நமது பெண்களின் அதிகதிகமான அமல்களும் சமையலும் அழகாக பதட்டமில்லாமல் அமைதியாக நடைபெறுகின்றது.இதனை விடுவோம்.

…. மறுபுறம்.. அரசாங்கம் இப்படி நினைத்தால்..? ஏனைய காலங்களை விட நோன்பு காலங்களில் முஸ்லிங்கள் மிகவும் உற்சாகமிருக்கிறார்கள் மேலதிக வகுப்புக்களில் அதிகமாக பங்கேற்கிறார்கள் எனவே நோன்பு காலங்களில் பாடசாலையை நடாத்துவே நாம் முஸ்லிங்களுக்கு (ம் அவர்களது அமல்களுக்கும்)  செய்யும் நலவாக உதவியாக இருக்கும்  என்று பாடசாலையை நோன்பு காலங்களில் நடாத்தத் தீர்மானித்தால்….என்ன நடக்கும்…….!

போராட்டங்கள் வெடிக்கும்…!!·         அரசாங்கம் முஸ்லிங்களை அவமதிக்கிறது….·         சமய அனுஷ்டானங்களை தடுக்கிறது…..·         அரசாங்கம் இனவாதம் காட்டுகிறது….·         முஸ்லிம் அமைச்சர்கள் வாய்மூடி மெளனம்….·         இதைக் கேட்க யாருமில்லையா?…..·         இப்போ நாம் என்ன செய்வது….·

      பத்திரிகைகள் கண்டனம்….·         பெண்களும் வீதிக்குள் போராட்டம்….·         முஸ்லிம் அமைப்புக்கள் கண்டனம்…·         முஸ்லிம் நாடுகள் கண்டனம்…·         ஜம்மியத்துல் உலமா அறிக்கை….என்று எவ்வளவு உரிமையோடு? போராடுவோம்! இறுதியில் அரசாங்கத்தில்  இனவாதம் ஓங்கியிருக்கிறது என்று அரசைச் சாடுவோம்…

. தொடர்ந்தும் அரசைக் குறைகாணுவோம்… இது என்ன (அ) நியாயம்..!·         யோசிப்போம்….·         ரமளானை நேசிப்போம்….·         இம்மாதம் இறை மன்னிப்புக்காக கிடைத்த சந்தர்ப்பங்களை இறுதிவரை பயன்படுத்துவோம்….·         அரச சலுகைகளுக்கு கருத்து வேறுபாடுகளின்றி மதிப்பளிப்போம்…·         ரமளானிலும் படிப்போம்.. படிப்பிப்போம்.. ஆனால் முழு ரமளானையும் அதற்காய் பயன்படுத்தாமலிருப்போம்!வஸ்ஸலாம்.

தெஹியங்க – ரிஸ்வான் எம் உஸ்மான்

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com