தமிழ் සිංහල English
Breaking News

அன்வர் இஸ்மாயில் எனும் – அமைச்சரை இழந்த துயரம்…!

இன்று போல்
அன்றும் ஒரு
வெள்ளிதான்
தலை – நோன்பை
சுமந்த இரவே
துறையூரின்
தலைவனொருவனும்
இறையடியில்….
இன்னாலில்லாஹ்…

அன்வர் இஸ்மாயில்
எனும் – அமைச்சரை
இழந்த துயரம்…
தலை மகனை
இழந்த சோகம்
ஊரையே – உலுக்கிட்டு
கொஞ்ச நெஞ்சம்
காலமல்ல…
இன்னும் ஆராவில்லை
பலர் – மனங்களில்
இம் மைந்தனின் பிரிவு

றிஸ்லின் என்ற
பெயருடனே
பெருந்தலைவர்
அஷ்ரபின் – அரசியல்
வாரிசாகி…
தொழில்கள், கட்டடங்கள்
கல்விக் கூடங்களென
அத்தனையும் கொண்டு
வந்த மைந்தரவனே
மர்ஹும் அன்வர் இஸ்மாயில்….

வருடங்கள் பல கடந்தும்
உன் நினைவு
இங்கு மீட்டுகையில்
உள்ளமெல்லாம் அழுகிறதே
துடிப்பான ஆளுமையை
இழந்திட்டோமென்று….

உம் – மறுமை வாழ்வு
செழிப்புற – இரு
கரமேந்துகிறோம்
இறைவனிடம்…

– கியாஸ் ஏ. புஹாரி

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com