தமிழ் සිංහල English
Breaking News

கோட்டபாயவினால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது-ஜேவிபி!

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்சவினால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது என ஜேவிபி தெரிவித்துள்ளது.

தம்மை வீரர்களாக அடையாளம் காட்டும் இவர்கள் ஜனாதிபதியாக முயற்சித்தாலும் அவர்களால் நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காண முடியாது என்றும் ஜேவிபியின் மத்திய குழு உறுப்பினரும் தொழிற்சங்கத் தலைவருமான கே.டி. லால்காந்த் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ச களமிறங்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளன.

அத்துடன், அண்மையில் கொழும்பு சங்கரிலா ஹோட்டலில் கோட்டபாய பங்கெடுத்த மாநாடு ஜேவிபியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு குறித்து ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே, கே.டி. லால்காந்த் இவ்வாறு கூறியுள்ளார்.

இதற்கு முன்னரும் தனிப்பட்ட நபர்களை முன்னிலைப்படுத்தி நாட்டின் தலைவர்களாக்கிய போதும், அவர்கள் எவரும் நாட்டை கட்டியெழுப்பவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தனித் தனி வீரர்களால் நாட்டை கட்டியெழுப்ப முடியாது எனக் குறிப்பிட்ட அவர், தனி நபர்கள் ஜே.வி.பிக்கு சவாலானவர்களும் அல்ல என்றும் மஹிந்த ராஜபக்ச என்ற தனி நபரை தாம் சவாலாக எடுத்தோம் என்றும் கூறியுள்ளார்.

அதற்கமைய அவரைத் தோற்கடித்து வீட்டுக்கு அனுப்பியதாகவும் இவ்வாறான நிலையில் தனித்தனி வீரர்கள் மக்களின் பிரச்சினைகளுக்குப் பதில் வழங்கப் போவதில்லை என்றும் கூறியுள்ளார்.

இதுபோன்று தான் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஆகாயத்தில் இருந்து கொண்டு வந்தவர் போல அரசியலுக்கு அழைத்து வரப்பட்டதாகவும் முன்னாள் பிரதமர்களின் மகள், இன்னொருடைய மனைவி எனக் கூறியே அவரை அரசியலுக்கு கொண்டு வந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால் அவர் நாட்டுக்கு எதனையும் செய்யவில்லை என்றும் தற்பொழுது கோட்டாபய பற்றி பேசுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com