தமிழ் සිංහල English
Breaking News

நினைவேந்தல் ஏற்பாடுகளை நேரில் சென்று பார்வையிட்ட விக்னேஸ்வரன்..!

முள்ளிவாய்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை நாளைய தினம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் குறித்த பணிகளின் தற்போதைய நிலைமை தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று (புதன்கிழமை) நேரில் சென்று அவதானித்துள்ளார்.

வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களும் முதலமைச்சருடன் சென்று நிலைமைகளை ஆராய்ந்துள்ளனர்.

இதன்போது நிகழ்வுக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வரும், யாழ்.பல்கலைகழக மாணவர்களை சந்தித்து முதலமைச்சர் உள்ளிட்டோர் கலந்துரையாடியுள்ளனர்.

இதேவேளை இறுதி யுத்தத்தில் உயிர் நீத்த உறவுகளை நினைவு கூறும் நிகழ்வு திருகோணமலை கடற்கரையில் அமைந்துள்ள வெலிக்கடைத் தியாகிகள் மண்டபத்திற்கு முன்பாக நேற்று மாலை இடம்பெற்றது

இதில் வடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம், முன்னாள் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி உட்பட பொது மக்கள் பலர் பங்கேற்று சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

தமிழ் இனத்திற்கு சர்வதேச நீதி விசாரணைப் பொறிமுறையினூடாக நீதி கிடைக்க வேண்டும் என சர்வதேசத்திற்கு வேண்டுகோல் விடுக்கும் முகமாகவே இந்த நிகழ்வு நடைபெற்றது.

இதேவேளை, முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் ஒன்பதாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, நாளைய தினத்தை துக்க நாளாகவும், தமிழினப் படுகொலை நாளாகவும் வடக்கு மாகாண சபை பிரகடனம் செய்துள்ளது.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com