தமிழ் සිංහල English
Breaking News

மேயர் ரோசியின் மலசலகூடத்துக்கு 5.7 மில்லியன் ‌ரூபா .!

கொழும்பு மாநகர சபையின் மேயருக்கான உத்தியோகப்பூர்வு இல்லத்தில் உள்ள மலசலகூடத்தை நவீன மயப்படுத்துவதற்காக 5.7 மில்லியன் ‌ரூபாய் நிதி கொழும்பு மாநகர சபையினால், ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அம்மாநாகர சபையின் உறுப்பினர்,சுமித் பஸ்ஸபெரும தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாநகர சபைக்குற்பட்ட நகரங்களில் உள்ள பொது மலசலக்கூடம் சுகாதாரமற்றவையாக இருக்கின்ற நிலையில், பொதுமக்களின் வரிப்பணத்தை இவ்வாறு செலவு செய்வது கவலையளிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்,

நேற்று நடைபெற்ற கொழும்பு மாநகர சபையின் அமர்வுகளின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிலையில், கடந்த நான்கு வருடங்களாக, கொழும்பு மாநகர சபை மேயருக்கான உத்தியோகப்பூர்வ இல்லத்தில் உள்ள மலசலகூடம் பாவனைக்குற்படாத நிலையில் காணப்பட்டதால், பாழடைந்திருக்கின்றது என்று கொழும்பு மாநகர மேயர் ​ரோசி சேனநாயக்க இதற்கு பதலளித்துள்ளார்.

​மேலும் தனியார் நிறுவனம் ஒன்று கொழும்பு நாகரை சுற்றியுள்ள பொது மலசலகூடங்களை நிர்மானித்து வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு மாநகரசபையின் புதிய மேயர், சர்வாதிகாரியைப்போல செயற்படுவதாகவும், அமைச்சர்கள் கூட புதிய மேயரை பார்க்கவேண்டும் என்றால் முன்கூட்டியே கடிதம் வழங்கி நேரத்தை ஒதுக்கிக்கொள்ளக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர், சமன் அபேரட்ன குற்றம்சுமத்தியுள்ளார்.

இதற்கு பதிலளித்த மேயர் ரோசி, கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர்கள் 119 பேரையும் தனித்தனியே ஒருநேரத்தில் சந்திப்பதற்கு நேரமில்லை. உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கிகளின் பிரதநிதிகளை சந்திப்பதற்கே நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com