தமிழ் සිංහල English
Breaking News

திடீரென தீப்பற்றிய முச்சக்கரவண்டி..!

கண்டியிலிருந்து ஹட்டன் நோக்கி, இன்று காலை பயணித்த முச்சக்கரவண்டியொன்று, கம்பளை எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு அருகில், திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக, கம்பளை பொலிஸார் தெரிவித்தனர்.

முச்சக்கர வண்டியில், ஐவர் பயணித்துள்ளனரெனவும் எனினும், இவர்கள்  எவ்வித காயங்களுமின்றி உயிர்த்தப்பியுள்ளரென்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாரும் பொதுமக்களும் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

சுமார் 7 இலட்சம் ரூபாய் பெறுமதியான முச்சக்கரவண்டியே இதன்போது தீக்கிரையாகியுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com