தமிழ் සිංහල English
Breaking News

பலஸ்தீன் இஸ்ரேல் விவகாரத்தில் அமெரிக்கா பக்கச் சார்பாக நடந்துகொள்கிறது..!

பலஸ்தீன் இஸ்ரேல் விவகாரத்தில் அமெரிக்கா பக்கச் சார்பாக நடந்துகொள்வதாகஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ குறிப்பிட்டார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர்மேலும் கூறுகையில்,

அமெரிக்காவின் தலையீடு எங்கொல்லாம் உள்ளதோ அங்கெல்லாம் பிரச்சினைகள்குறைத்த வரலாறு இல்லை மாறாக பிரச்சினைகள் அதிகரித்த வரலாறுகளே உள்ளன.

இஸ்ரேல் பலஸ்தீன் விவகாரத்தில் அமெரிக்காவின் செயற்பாடு எரியும் நெருப்பில்எண்ணெய் ஊற்றுவதாக அமைந்துள்ளது.

இஸ்ரேல் தலைநகர் ஜெரூசலம் என அமெரிக்கா கடந்த வருடம் அறிவித்ததோடுஇஸ்ரேல் டெல் அலிவ் நகரில் இருந்த தமது தூதரகத்தை ஜெருசலத்திற்கு மாற்றுவாதாக அறிவித்திருந்த அதேவேளை கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமது தூதரகத்தைஜெரூசலத்தில் திறந்துவைத்தது.

அமெரிக்காவின் இந்த செயற்பாடு பலஸ்தீனர்கள் மற்றும் அவர்களின் நேசநாடுகளுக்குகடும் கவலையையும் ஆத்திரத்தையும் ஏற்பட்டுத்தியதுடன் பலஸ்தீனில் மோதல்களைமேலும் வலுசேர்க்கும் வகையில் அமைந்திருந்தது.

இஸ்ரேல் விவகாரத்தில் அமெரிக்காவின் நிலைப்பாடு பலஸ்தீனர்களைநெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் அமைந்திருந்த போதும் உலக நாடுகள் இதுதொடர்பில் மவுனமாகவே உள்ளன.

கடந்த சில தினங்களாக காஸாவில் பாரிய மோதல் வெடித்துள்ள நிலையில் பலர்கொல்லப்பட்டுள்ளனர்.ஐரோப்பாவில் இடம்பெறும் சிறு சம்பவங்களுக்கெல்லாம்கண்டணம் தெரிவிக்கும் இலங்கை அரசு பலஸ்தீன விவகாரத்தில் இதுவரை எந்தகண்டத்தையும் வெளியிடவில்லை.

இந்த அரசாங்கள் அமெரிக்கா போடும் தாளத்திற்கு ஆடும் பொம்யாக செயற்படும்அதேவேளை நியாயத்தின் பக்கம் நிற்காமல் செயற்பட்டு வருகிறது என குறிப்பிட்டார்.

மேலும் பலஸ்தீனுடனான உறவை கௌரவிக்கும் வகையிலேயே அந்த நாட்டு அரசுமுன்னாள் ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களின் பெயரை அங்குள்ள வீதிக்குபெயரிட்டு அவரை கௌரவித்ததையும் அவர் நினைவு கூர்ந்தார்.

பலஸ்தீனில் அப்பாவிகள் கொல்லப்படுவது நிறுத்தப்பட வேண்டும் எனவும் அங்குநிறந்தர சமாதானம் ஏற்பட உலகம் ஒன்றினைய வேண்டுமெனவும் தனது ட்விட்டர்பக்கத்தில்  நாமல் ராஜபக்‌ஷ  பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com