தமிழ் සිංහල English
Breaking News

ஒவ்வொருவரும் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய குரோம் எக்ஸ்டென்சன்..!

இணையத்தள வசதிகளில் சிறந்த ப்ரவுசர்களில் ஒன்றான கருதப்படுவது தான் குரோம்.

அதன் வெப் ஸ்டோரில் உள்ள பல்வேறு எக்ஸ்டென்சன்களை ப்ரவுசரில் இணைப்பதன் மூலம் செயல்திறனை அதிகரிக்க முடியும்.

கீழ் குறிப்பிடப்பட்டுள்ள என்ஸ்டென்சன்கள் நமது வேலையை இலகுவாக உதவி செய்கின்றது. இதனை நாமும் தெரிந்து அறிந்து கொள்ளலாம்.

AdBlock

பாப்அப் ஏட், பேனர் ஏட் மற்றும் இன்னபிற ஏட் அனைத்தும் இந்த குரோம் எக்ஸ்டென்சன் மூலம் தடுக்கப்படும். மேலும் இதன் மூலம் ப்ரவுசரின் செயல்திறன் அதிகரித்து ப்ரவுசிங் வேகமும் அதிகரிக்கும்.

LastPass

குரோம் ப்ரவுசரில் மட்டுமில்லாமல், பல்வேறு ப்ரவுசர்கள் மற்றும் தளங்களிலும் ஃப்ரீமியம்(Freemium) சேவையாக இந்த எக்ஸ்டென்சன் கிடைக்கிறது. இந்த சேவையின் முக்கிய வேலை, உங்களின் அனைத்து யூசர்நேம் மற்றும் பாஸ்வேர்டுகள் என்கிரப்சன் செய்து பாதுகாத்து வைக்கும்.

Reddit Enhancement Suite

ரெட்இட்-ல் ப்ரவுசிங் செய்யும் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் இந்த எக்ஸ்டென்சன் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கிடைக்கும் பல்வேறு செயல்பாட்டு குறுக்குவழிகள் கண்டிப்பாக உதவிகரமாக இருக்கும்.

Vimium

இதன் மூலம் நேவிகேட் செய்வது மிகவும் எளிதாகும் மற்றும் பல்வேறு செயல்பாடுகளை கீபோர்டு குறுக்குவழிகள் மூலமே செய்து முடிக்க முடியும்.

Google Dictionary

உங்களுக்கு பரிச்சயம் இல்லா வார்த்தை அல்லது சொற்தொடருக்கான அர்த்தம் மற்றும் விளக்கத்தை இந்த சேவை வழங்குகிறது

Hover Zoom

இணையத்தில் உள்ள பல்வேறு படங்களுக்கு மத்தியில், உங்களுக்கு தேவையான படத்தை டவுன்லோட் செய்யாமலேயே அதன் மீது கார்சரை வைத்து ஜூம் செய்து பார்க்க வழிவகை செய்கிறது இந்த எக்ஸ்டென்சன்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com