தமிழ் සිංහල English
Breaking News

கூட்டணி என்ற பேச்சிற்கே இடமில்லை-மதச் சார்பற்ற ஜனதா தளம்!

கர்நாடகாவின் சட்டமன்றத் தேர்தல் முடிவை தொடர்ந்து கூட்டணிகள் அமைப்பது தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில், பா.ஜ.க.வுடன் கூட்டணி என்ற பேச்சிற்கே இடமில்லை என மதச் சார்பற்ற ஜனதா தளம் தெரிவித்துள்ளது.

மதச் சார்பற்ற ஜனதா தளத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டம் இன்று (புதன்கிழமை) பெங்களூரில் குமாரசாமி தலைமையில் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் தேர்தல் கூட்டணிகள் தொடர்பில் கருத்து வெளியிட்ட குமாரசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் வேட்டையாடப்பட வில்லை என்பதை நாங்கள் உறுதிபடுத்தியுள்ளோம் என அவர் கூறினார்.

அதுமட்டுமன்றி எங்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திற்கு பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.

ஆனால், கர்நாடகாவில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கும் பேச்சுக்கே இடமில்லை. ஏற்கனவே முடிவு எடுக்கப்பட்டதைப் போல காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி ஆட்சி அமைக்கப்படும் என அவர் தெரிவித்திருந்தார்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com