தமிழ் සිංහල English
Breaking News

புருவ அழகியை நெருங்க முடியாத உலக அழகி..!

பெண்களிடம் அழகு என்பது எதில் இருக்கிறது என்று கேட்டால் ஒவ்வொருவரும் ஒரு காரணம் சொல்வார்கள். சிலருக்கு சிரிப்பழகு, சிலருக்கு கண்கள் அழகு… என ஒவ்வொன்றாக அடுக்கிக் கொண்டே போவார்கள்.

ஆனால், புருவத்தை மட்டும் உயர்த்திக் காட்டி இந்தியாவையே கிறங்கடித்தவர் கேரளாவைச் சேர்ந்த பிரியா வாரியர். அந்த புருவ சிமிட்டலில் மயங்கியவர்கள் தான் பிரியா வாரியர் இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் நுழைந்த போது ஒரே நாளில் 6 லட்சம் பேர் அவரைத் தொடர்ந்தார்கள்.

உலக அளவில் இதற்கு முன் கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியன் ரொனால்டோ 650000 தொடர்பாளர்களையும், ஹாலிவுட் டிவி பிரபலம் கிலி ஜென்னல் 806000 தொடர்பாளர்களையும் பெற்றார்கள். அவர்களுக்குப் பிறகு அதிக தொடர்பாளர்களைப் பெற்றது பிரியா வாரியர்தான்.

பிரியாவின் சாதனையை ஐஸ்வர்யா ராய், இன்ஸ்டாகிராமில் நுழைந்தால் முறியடித்து விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், புருவ அழகியை உலக அழகியால் மிஞ்ச முடியவில்லை. ஐஸ்வர்யா ராயை ஒரே நாளில் 106000 பேர் மட்டுமே தொடர்ந்தார்கள். பிரியாவின் சாதனையில் 5ல் 1 பங்குதான் அது.

தற்போது பிரியா வாரியரை 59 லட்சம் பேரும், ஐஸ்வர்யா ராயை 9,18,000 பேரும் இன்ஸ்டாகிராமில் தொடர்கிறார்கள்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com