தமிழ் සිංහල English
Breaking News

படுகொலை செய்யப்பட முன் புலிகளின் தலைவர்களுடன் கைகுலுக்கிய சவேந்திர சில்வா..!

படுகொலை செய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் தலைவர்களுடன் மே 18 இல் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா வட்டுவாகல்பாலத்தில் வைத்து கைகுலுக்கிக் கொண்டதற்கு கண்ணால் கண்டசாட்சியங்கள் உள்ளதாக சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

வட.மாகாண அமைச்சர் அனந்தி சசிதரனது அலுவலகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) காணாமற்போனவர்களின் உறவினர்களுடன் ஸ்கைப் மூலம் யஸ்மின் சூக்கா மேற்கொண்ட கலந்துரையாடலின் பின்னர் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,’போரின் இறுதி நாட்களில் சரணடைந்தவர்களின் பட்டியலைக் கொடுப்பதற்கு இலங்கை இராணுவத்தின் 58ஆவது படைப்பிரிவு தொடர்ந்தும் மறுத்து வருகின்றது.

குறித்த 58ஆவது படைப்பிரிவு சரணடைந்தவர்களைத் தனது பாதுகாப்பில் கையேற்ற விடயம் ஐ.நா. விசாரணையில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், குறித்த படைப்பிரிவிற்கு மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவே பொறுப்பாகவிருந்தார்.

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா ஜெனரல் ஜெயசூரியவிற்கு கீழ் பணியாற்றியிருந்தார். கத்தோலிக்கப் பாதிரியார் தலைமையில் சரணடைந்த பின்னர் உடனடியாகவே படுகொலை செய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் அரசியல் தலைவர்கள் உள்ளிட்டவர்களுடன் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா கைகுலுக்கிக் கொண்டதை அங்கிருந்தவர்கள் நேரடியாகப் பார்த்த சாட்சியங்கள் காணாமல் போனவர்களுக்கான இணையத்தளமான ITJP இல் பதிவு செய்யப்பட்டுள்ளன’ என யஸ்மின் சூக்கா மேலும் குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com