தமிழ் සිංහල English
Breaking News

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் ஆரம்பம்: லால்காந்த!

மக்கள் மீது தாங்கமுடியாத வரிச்சுமைகளைச் சுமத்தும் இந்த அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தினை ஆரம்பிக்கவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல்சபை உறுப்பினர் கே.டீ.லால்காந்த தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லை, பெலவத்தை, மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வரிக்கு மேல் வரிகளைச் சுமத்தி மக்களை வதைக்கும் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் போராட்டம் இம்மாதம் 22 ஆம் திகதி கொழும்பிலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது.

அரசாங்கத்திலுள்ள அமைச்சர்கள் பொருளாதார அபிவிருத்தி குறித்து எவ்வளவுதான் பேசினாலும், அது நடக்கப் போவதில்லை. ஏனெனில் அவர்களுக்கு இதைப்பற்றி எந்த முழுமையான அறிவும் இல்லை.

மக்களுக்கு பொருட்களின் விலையேற்றம் குறித்து விளக்கமளிக்கத் தேவையில்லை. ஏனெனில், அவர்கள் அன்றாடம் இதன் துன்பங்களை அனுபவிப்பவர்கள்.

எனவே மக்கள் போராட்டமொன்றை ஏற்படுத்தி விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்போம். அதுவும், முடியாது போனால் மக்கள் அனைவரும் இணைந்து இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்போம்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com