தமிழ் සිංහල English
Breaking News

இரு கைகளும் இல்லை:தன்னம்பிக்கையை இழக்காத செல்வநாயகி..!

யாழ்.வடமராட்சி பகுதியில் தன் அவயங்களை இழந்தப் பெண் ஒருவர், கணினி வகுப்பை நடாத்தி வாழ்க்கையை கொண்டு செல்வது தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

செபஸ்டியன் செல்வநாயகி என்ற 42 வயதான பெண்ணுக்கு இரு கைகளும் இல்லை. அவர் யுத்த சூழ்நிலையால் தனது அவயத்தை இழந்துள்ளார்.
1990ம் ஆண்டு இடம்பெற்ற தாக்குதலின் சம்பவத்தின் போது தனது கைகளை இழந்துள்ளார்.

கைகளை இழந்த போதும், தன்னம்பிக்கையை இழக்காத செல்வநாயகி, தனது கால்களை கொண்டு பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

அவர் ஐந்து கணிகளை வைத்துக்கு கொண்டு மாணவர்களுக்கு கணினி பாடம் கற்பித்து வருகிறார்.

கைகள் இல்லாத போதும் கால் விரல்கள் மூலம் கணினி வகுப்புகளை செய்து வருகின்றார்.

வடமாராட்சி கிழக்குப் பகுதியில் உள்ள வெற்றிலைக்கெணி பகுதியில் உள்ள தனது சிறிய வீட்டிலேயே ஐந்து கணிணிகளை வைத்து குறித்த பெண் கற்பித்து வருகின்றார்.

செல்வநாயகியின், அலுவலக உதவியாளர் கணிணியை முதலில் ஓன் செய்வார். அவர் கதிரையில் அமர்ந்து தனது கால் விரல்களால் கடவுச்சொல்லை தட்டச்சு செய்வார்.

குறித்த பெண் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இவ்வாறே கணினியில் தட்டச்சு செய்து வருகின்றார்.

திறந்த பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் கற்கைகளை செல்வநாயகி பூர்த்தி செய்துள்ளார்.

யுத்தம் முடிவடைந்து மூன்ற ஆண்டுகளுக்கு பின்னர் ,2012ம் ஆண்டில் செயற்கை உறுப்புக்களை பொருத்தும் முயற்சிகளை மேற்கொள்ள சென்னை சென்றுள்ளார். செலவுகள் அதிகம் என்பதால் அந்த முயற்சியை அவர் கைவிட்டுள்ளார்

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com