தமிழ் සිංහල English
Breaking News

உடனடியாக விலையேற்றத்தை நீக்க வேண்டும்-அசாத் சாலி குற்றசாட்டு!

எரிபொருள் மற்றும் பால்மாவின் விலையேற்றம் தேவையற்ற ஒன்று எனவும், குறிப்பாக பால்மா விலையேற்றமானது நிறுவனங்கள் இலாபத்தை பெற்றுக்கொள்ளும் வகையில் இடம்பெற்றுள்ளதென்றும் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் அசாத் சாலி குற்றஞ்சாட்டியுள்ளார். பால்மா நிறுவனங்கள் லாபத்துடனேயே இயங்குவதாக குறிப்பிட்ட அவர், இதன் பின்னால் பாரிய ஊழல் மோசடி இடம்பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இக்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அத்தோடு, எரிபொருள் விலை அதிகரிக்கப்பட மாட்டாதென்றும் வரிகள் நீக்கப்படும் என்றும் கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம், தற்போது அவற்றை மீறி செயற்படுகின்றதென்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், பால்மாவினால் ஏற்கனவே அரசாங்கம் போதிய வருமானத்தை பெற்றுக்கொள்ளும் நிலையில், ஜனாதிபதி இவ்விடயத்தில் தலையிட்டு உடனடியாக விலையேற்றத்தை நீக்க வேண்டுமென கோரியுள்ளார்.

இதேவேளை, நோன்பு காலத்தில் முஸ்லிம்கள் நன்மையடையும் வகையில் சதொச நிறுவனங்களில் மானிய விலையில் பொருட்களை வழங்குவதற்கான சுற்றுநிருபத்தை அரசாங்கம் வெளியிட வேண்டுமென்றும் அசாத் சாலி கேட்டுக்கொண்டார்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com