தமிழ் සිංහල English
Breaking News

கண்டி வன்முறை:திலும் அமுனுகமவிடம் தொடர்ந்து 12 மணிநேர விசாரணை!

கூட்டு எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகமவிடம் தொடர்ந்து 12 மணிநேர விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத புலனாய்வு பிரிவுக்கு விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டிருந்த திலும் அமுனுகமவை 12 மணிநேர தொடர் விசாரணைகளின் பின்னரே வீட்டிற்குச் செல்ல அனுமதித்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

கண்டி பிரதேசத்தில் அண்மையில் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணைகளுக்கு அமைவாக வாக்குமூலம் ஒன்றினை வழங்குவதற்கு அவர் நேற்றுப் பயங்கரவாதப் புலனாய்வு பிரிவில் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

விசாரணைகளின் பின்னர் திலும் அமுனுக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், ‘நான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையிலேயே கண்டி வன்முறைச் சம்பவங்களின்போது எவருக்கும் பாதிப்பற்ற வகையில் நடந்துகொண்டேன். இதனை அனைத்து மக்களும் நன்கு அறிவார்கள்.

இன்றைய விசாரணையில் எனது கைத்தொலைபேசி பெறப்பட்டு அது அவர்களால் சோதனைக்குட்படுத்தப்பட்டிருந்தது. விசாரணை செய்வது அவர்களது கடைமை எனவே அதற்கு எனது பூரண ஒத்துழைப்பினை வழங்கியிருந்தேன்’ என அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com