தமிழ் සිංහල English
Breaking News

செல்பி மோகத்தால் அநியாயமாக பச்சை குழந்தை பலி..!(வீடியோ)

இந்தியா ராஜஸ்தானின் கங்காநகரில் உள்ள சிஜிஆர் மாலுக்கு பெண் ஒருவர் தன் பத்து மாதக் கைக்குழந்தை மற்றும் கணவருடன் சென்றுள்ளார்.

அங்கு மூன்றாவது தளத்திற்குச் செல்ல எஸ்கலேட்டரின் உதவியை நாடியுள்ளார். அப்போது அந்தப் பெண்ணின் கணவர் எஸ்கலேட்டர் இயக்கத்தில் இருக்கும் சமயத்தில் ஒரு செல்ஃபி எடுக்குமாறு அந்தப் பெண்ணிடம் கூறியுள்ளார்.

அப்போது, அந்த பெண் செல்ஃபி எடுக்க முயன்ற போது அந்தப் பெண் கையிலிருந்த 10 மாதக் கைக்குழந்தை நிலை தடுமாறி எஸ்கலேட்டருக்கும் நடைபாதைக் கைபிடிக்கும் இடையே மோதிக் கீழ் தளத்தில் விழுந்தது.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அந்தக் குழந்தையை சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டுசென்றுள்ளனர். அங்கு தரையில் மோதிய உடனேயே அந்தக் குழந்தையின் உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து தற்போது போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

செல்பி மோகத்தால் அநியாயமாக பச்சை குழந்தை பலியாகிய சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com