தமிழ் සිංහල English
Breaking News

வீட்­டுக்கு அனுப்­பிய மகிந்­தவை மக்­கள் கொண்­டாடமாட்­டார்­கள்..!

போரை முடி­வுக்­குக் கொண்டு வந்த முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச சர்­வா­தி­கார ஆட்சி செய்­தார். அத­னால் ஆட்­சி­யில் இருந்த அவரை மக்­கள் வீட்­டுக்கு அனுப்­பி­னர். அவரை மீண்­டும்
ஆட்­சி­யில் அமர்த்த இட­ம­ளிக்க மாட்­டார்­கள்.

இவ்­வாறு தெரி­வித்­தார் பெருந்­தோட்ட கைத்­தொ­ழில் அமைச்­சர் நவீன் திசா­நா­யக்க.

தல­வாக்­கலை சுமன சிங்­கள வித்­தி­யா­ல­யத்­தில் நேற்று நடை­பெற்ற சித்­தி­ரம் மற்­றும் பத்­தி­ரிகை கண்­காட்­சியை ஆரம்­பித்­து­வைக்­கும் நிகழ்­வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார்.அவர் தெரி­வித்­தா­வது-,

உரிய வளர்ச்சி ஏற்­பட்­டால் நாட்­டில் சகல பிரச்­சி­னை­க­ளுக்­கும் தீர்வு கிட்­டி­வி­டும். இது­வரை கால­மும் நமது மக்­க­ளின் எண்­ணங்­களை நாடி பிடித்து அறி­ய­மு­டி­ய­வில்லை. அதி­கா­ரத்­தில் இருப்­ப­வர்­கள் மக்­க­ளுக்­குச் சரி­யான சேவை­யைச் செய்­ய­வேண்­டும்.- என்­றார்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com