தமிழ் සිංහල English
Breaking News

நயன்தாராவிடம் காதல் மொழி பேசும் யோகி பாபு..!

லைகா நிறுவனம் தயாரிக்கும் படம் கோலமாவு கோகிலா. இதில் நயன்தாரா சோலோவாக நடிக்கிறார். நெல்சன் என்ற புதுமுகம் இயக்குகிறார். அனிருத் இசை அமைத்துள்ளார். ஏற்கெனவே இந்தப் படத்தின் ஒரு பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இரண்டாவது பாடலான கல்யாண வயசு என்ற பாடல் நாளை மறுநாள் வெளியிடப்படுகிறது.

இதையொட்டி வெளியிடப்பட்டுள்ள விளம்பர வீடியோ வைரலாக பரவி வருகிறது. காமெடி நடிகர் யோகிபாபு, நயன்தாராவிடம் காதலை சொல்ல வருவது போன்று இருக்கிறது. அதனை நயன்தாரா கூலாக கேட்டுக் கொண்டிருக்கிறார். யோகி பாபுவின் காதல் வசனம் இது…

“வீட்டுக்குபோனா யாரையாவது கல்யாணம் பண்ணிக்கன்னு சொல்ற அப்பா, அத்தை பொண்ணாத்தான் கல்யாணம் பண்ணனும்னு சொல்ற அம்மா, பேரக் குழந்தைகளை பார்க்கணும்னு சொல்ற பாட்டி. இந்த டார்ச்சரெல்லாம் தாங்க முடியாம கடைக்கு வந்தால் என்னையே ஏக்கமா பாக்குற பொண்ணுங்க.

அவுங்கிட்டல்லாம் நான் ஒண்ணே ஒண்ணுதான் சொல்லியிருக்கேன்… கட்டினா அந்த பொண்ணத்தான் கட்டுவேன்னு. இதுவரைக்கும் அந்த பொண்ணு யாருன்னு யாருகிட்டேயும் சொன்னதில்லை. முதன் முதலா உங்ககிட்டதான் சொல்லப்போறேன்” என்று படு சீரியசாக யோகிபாபு சொல்வது ரசிக்கும்படியாக இருக்கிறது. இது வைரலாக பரவி வருகிறது.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com