தமிழ் සිංහල English
Breaking News

வேலையற்ற பட்டதாரிகளின் தொழில் உரிமை போராட்டம்..!

அனைத்து வேலையற்ற பட்டதாரிகளிற்கும் நியமனம் வழங்குதல் வேண்டும் எனக் கோரியும் வேலையற்ற பட்டதாரிகளின் தொழில் உரிமை போராட்டத்தில் மேற்கொண்ட நீர்வீச்சுக்கு எதிராகவும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்பாக நாளை காலை 10 மணியளவில் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளினால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

தற்போது வேலையற்ற பட்டதாரிகளுக்கான நேர்முகத் தேர்வு நடைபெற்றுள்ளது.

எனினும் நேர்முகத் தேர்வு நடைபெற்ற அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனங்கள் எப்போது, எதுவரை வழங்கப்படவுள்ளது என்பது தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட தகவலை குறித்த அமைச்சு வெளியிடவில்லை.

இதன்பொருட்டு எழுத்துபூர்வமாக 35 வயதிற்கும் மேற்பட்டவர்களையும், 2017 வேலையற்ற பட்டதாரிகளையும் உள்வாங்குதல் வேண்டும் எனவும் பட்ட சான்றிதழ் இறுதித் திகதியின் அடிப்படையிலும் அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனங்கள் வழங்குதல் வேண்டும் என கொழும்பில் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்திற்கு நீர் வீச்சு மேற்கொள்ளப்பட்டு தமது தொழில் உரிமைக்கு எதிராக செயற்பட்டமைக்காக நாடளாவிய ரீதியில் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெறவுள்ளது.

நேர்முகத்தேர்வில் கலந்துகொண்ட 35 வயதிற்கும் மேற்பட்ட வேலையற்ற பட்டதாரிகளின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு, உரிய அமைச்சுக்கு பெயர் விபரங்கள் வழங்கப்படவுள்ளது.

இந்த நிலையில், இந்த கவனயீர்ப்பு போராட்டத்திற்கு வருபவர்களின் பெயர் விபரங்கள் மாத்திரமே தம்மால் வழங்கப்படும் என வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகம் குறிப்பிட்டுள்ளது.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com