தமிழ் සිංහල English
Breaking News

ஜனாதிபதி தேர்தலில் ரணிலே பொருத்தமானவர்-மங்கள சமரவீர!

ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே பொருத்தமானவர் என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தனித்தே தனது பயணத்தை ஆரம்பிக்கும். அதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. மேலும், ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்ற கேள்விக்கும் எம்மிடம் பதில் உள்ளது.

2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் ஐ.தே.க. சார்பில் போட்டியிடுவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே தகுதியானவர். ஆகவே அவரை களமிறக்க வைப்பதற்கான நடவடிக்கைகளை நாம் முன்னெடுப்போம்.

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் குழப்பநிலை, தலைமைத்துவம் மற்றும் உறுப்பினர்கள் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாக பலர் குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால் இப்போது கட்சிக்குள் எந்த முரண்பாடுகளும் இல்லை. அனைத்துக் குழப்பங்களும் இப்போது தீர்க்கப்பட்டுவிட்டன’ என அமைச்சர் மங்கள சமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com