தமிழ் සිංහල English
Breaking News

98 கல்வி வலயங்களில் நுவரெலியா கல்வி வலயம் 74ஆவது இடத்தில்..!

நுவரெலியா பிரதேசத்தில் உள்ள ஐந்து கல்வி வலயங்களிலுமே கல்வி வளர்ச்சி வீழ்ச்சியடைந்துள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் சுட்டிக்காட்டியுள்ளார்.

நுவரெலியா பிரதேச அபிவிருத்தி குழுக்கூட்டம் நுவரெலியா மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றுள்ளது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அவரின் இந்த குற்றச்சாட்டை நுவரெலியா வலயக்கல்வி பணிமனையின் உதவிக் கல்வி பணிப்பாளர் எஸ்.மோகன்ராஜ் மறுத்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து இராஜாங்க அமைச்சர் இராதாகிருஸ்ணன் மேலும் கூறுகையில், ஹோலிப்பன்ட் பாடசாலையை அபிவிருத்தி செய்வதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆரம்ப்பிரிவு பாடசாலையை மாத்திரம் உருவாக்க எங்களால் முடியும்.

அப்படி அந்த பாடசாலைக்கு மேலதிக வகுப்புகளை மேற்கொள்ள வேண்டுமானால் மாணவர்களின் தொகை அதிகரிக்கபட வேண்டும். மாணவர்கள் அதிகமாக இல்லாவிட்டால் அங்கு மேலதிக ஆசிரியர்கள் வழங்க முடியாது.

குறித்த பாடசாலையில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரித்து வலயக்கல்வி பணிப்பாளர் காண்பித்தால் அதைபற்றி எம்மால் யோசனை ஒன்று முன்வைக்க முடியும்.

இலங்கையில் கல்வி துறையை எடுத்து கொண்டால் இலங்கையில் காணப்படுகின்ற 98 கல்வி வலயங்களில் நுவரெலியா கல்வி வலயம் 74ஆவது இடத்தை பிடித்திருக்கிறது என தெரிவித்துள்ளார்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com