தமிழ் සිංහල English
Breaking News

அடுத்த ஆட்சிக்காக ஐ.தே.க.வுடன் இணையப் போவதில்லை- மஹிந்த!

அடுத்த ஆட்சியை அமைப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியுடனோ அல்லது வேறு எந்த அணியுடனோ இணையப் போவதில்லை என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘எந்தக் கட்சியுடனும் கூட்டுச் சேராமல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையின் கீழ் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசாங்கமே அமைக்கப்படும்.

சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் மனங்களை வெற்றிகொண்ட தலைவர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மாத்திரமே ஜனநாயக ஆட்சியினை சிறப்பாக முன்னெடுத்து செல்ல முடியும்.

இனியும் அரசியல் இலாபங்களுக்காக நாம் கட்சி மாற வேண்டும் என்ற நிலைப்பாடு ஏற்படப்போவதில்லை. நாம் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையவும் மாட்டோம்.

அதேபோல் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் இணையவும் மாட்டோம். நாம் இறுதி வரையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியாகவே செயற்படுவோம்’ என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com