தமிழ் සිංහල English
Breaking News

20 நிமிடங்களுக்கு 10 ரூபாய் :எந்த கேர்ள் பிரெண்ட் வேணுமோ எடுத்துக்கலாம்.!

தென் சீனாவின் குவாங்டோங் மாகணத்தில் இருக்கும் ஹெயுவான் நகரில் இருக்கிறது வைட்டலிட்டிவணிக வளாகம் . இங்கே தங்கள் நுழைவாயில் பகுதியிலேயே அழகழகான பெண்களை வரிசைக்கட்டி ஒரு மேடையில் நிற்க வைத்துள்ளனர்.

இந்த வணிக வளாகத்திற்குவரும் ஆண்கள் ஒரு ஆர்.எம்.பி எனப்படும் சீன பணத்தை கொடுத்து (இந்திய மதிப்பில் பத்து ரூபாய்) 20 நிமிடங்களுக்கு அந்த பெண்ணை தங்கள் காதலி ஆக்கிக் கொள்ளலாம். எந்த பெண் வேண்டும் என்பதை அந்த ஆண்மகனே தேர்வு செய்துக் கொள்ளலாம்.

இங்கே சும்மா பத்து ரூபாய் கொடுத்து ஒரு பெண்ணை எங்கேனும் அதிக நேரம் கூட்டி செல்லலாம் என்றெல்லாம் தப்புக் கணக்கு போட்டுடாதிங்க. அவங்க ரொம்ப உஷாரா இருக்காங்க. ஆமா! ஒவ்வொரு பொண்ணு கையிலயும் ஒரு மொபைல் இருக்கும். அதுல ஒரு கியு.ஆர். கோட் இருக்கும். பத்து ரூபாய் கொடுத்து அந்த பெண்ணின் மொபைலில் இருக்கும் கோடினை ஸ்கான் செய்துக் கொள்ள வேண்டும்.

கியு.ஆர். ஸ்கேன் செய்த பிறகு உங்களுடன் எத்தனை நேரத்திற்கு காதலியாக இருக்க வேண்டும் என்பது பதிவாகிவிடும். அதற்கு மேல் ஒரு நொடி கூட அந்த பெண் உங்களுடன் காதலியாக இருக்க மாட்டார். இங்கே ஒரு நிபந்தனை என்னவெனில், நீங்கள் எத்தனை பணம் வேண்டுமானாலும் கட்டி அந்த பெண்ணை எத்தனை நேரம் வேண்டுமானாலும் காதலியாக ஆக்கிக் கொள்ள இயலும். ஆனால், முழுக்க, முழுக்க அந்த வணிக வளாகத்தில் மட்டுமே இருக்க வேண்டும். வெளியே எங்கேயும் செல்ல இயலாது.

இங்கே ஒரு பெண்ணை தனது காதலியாக்கி கொள்ள, அதாவது வாடகைக்கு காதலி ஆக்கிக் கொள்ள நீங்கள் பணம் செலுத்துவது அந்த வணிக வளாகத்தில்உள்ள குறிப்பிட்ட இடங்களில் சுற்றிப் பார்க்க மட்டுமே. அது தவிர நீங்கள் ஆசைப்பட்டால் செல்ஃபி எடுத்துக் கொள்ளலாமே தவிர, அவரை தொடுவது முத்தமிடுவது எல்லாம் நோ சான்ஸ் என்கிறது நிர்வாகம்.

கடந்த ஓரிரு நாட்களாக இந்த வணிக வளாகம் உலகெங்கிலும் வைரலாக பரவி வருகிறது. சீன மக்கள் இந்த செய்திக் கேட்டு வைட்டலிட்டி சிட்டிவணிக வளாகத்திற்கு சென்று வருகிறார்கள். பின்ன, பத்து ரூபாய்க்கு காதலி வேற எங்க கிடைக்கும் பாஸ். நம்ம ஊர்ல எல்லாம் இப்படி ஒரு சான்ஸ் கிடைச்சா.. கூட நின்னு நூறு செல்ஃபீ எடுத்துக்க மட்டுமே நம்ம பயலுக பல நூற ஆயிரம் செலவு பண்ணுவாங்க. நம்ம ஊர் மட்டுமில்ல, எந்த ஊரா இருந்தாலும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைச்சா விடுவாங்களா பின்ன?

சீனா காரங்களுக்கு மட்டும் எங்கிருந்து இப்படி எல்லாம் யோசனை வருதுன்னே தெரியல

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com