தமிழ் සිංහල English
Breaking News

முன்னாள் ஜனாதிபதி ஒருவர் இப்படி பேசுவது தகுமா?

தனது ஆட்சிக்காலத்தில் எரிபொருள் விற்பனை செய்யப்பட்ட விலைகளை மறந்து விட்டு தற்போதைய அரசாங்கம் வறிய மக்களை பழிவாங்க எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளதாக மகிந்த ராஜபக்ச கூறுவதாக அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

திருகோணமலை முதலிக்குளம் பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு காணப்பட்ட விலைகளை விட தற்போது எரிபொருள் குறைவான விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. நாட்டு மக்கள் இறந்து பிறந்து விட்டனரா? அவற்றை நாங்கள் மறக்கவில்லை.

மகிந்த ராஜபக்சவே தனது ஆட்சிக்காலத்தில் எரிபொருள் விலைகளை அதிகரித்து வறிய மக்களிடம் பழிவாங்கினார்.

நாட்டில் உள்ள வங்குரோத்து அரசியல்வாதிகள் காரணமாக புத்திசாலித்தனமாக உரையாடல்களையும் புதிதாக ஒன்றை பேசவோ முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

நாட்டை எப்படிதான் சிறந்த இடத்திற்கு கொண்டு செல்ல முயற்சித்தாலும் அதனை எப்படி தமது அரசியல் இலாபத்திற்கு பயன்படுத்திக்கொள்ளலாம் என்றே பலர் எண்ணுகின்றனர்.

முன்னாள் ஜனாதிபதி ஒருவர் இப்படி பேசுவது தகுமா?. ஒரு பிரதேச சபை உறுப்பினர் இதனை பேசியிருந்தால் பரவாயில்லை. அவரது ஆட்சிக்காலத்தில் எரிபொருள் விலைகள் அதிகரித்து காணப்பட்டதை அவர் மறந்து விட்டார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறுவது போல் நாட்டை முன்னேற்ற நாட்டை நேசிப்பவர்கள் அவசியம். சுயநலம் கருதாது, அரசியல் பற்றி சிந்திக்காது, நாட்டுக்காக பணியாற்றும் நபர்கள் தேவை. இதற்கு கட்சி பேதங்கள் அவசியமில்லை.

நாட்டை நேசிப்பவர்கள் இணைந்தால், நாட்டை முன்னேற்ற முடியும் எனவும் துமிந்த திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com