தமிழ் සිංහල English
Breaking News

எரிபொருள் விலையை குறைக்குமாறும் கோரும் சுவரொட்டிகள்..!

அரசாங்கத்தால் அதிகரிக்கப்பட்ட எரிபொருள்களுக்கான விலையை உடனடியாகக் குறைக்குமாறும் கோரும் சுவரொட்டிகள் மட்டக்களப்பு மாவட்ட நகர பிரதேசங்கள் மற்றும் கிராமப்புறங்களில் ஒட்டப்பட்டுள்ளன.

இன்று (திங்கட்கிழமை) அதிகாலை முதல் பரவலாக ஒட்டப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணி என உரிமை கோரப்பட்டுள்ள அந்தப் பிரசுரத்தில் ‘எரிபொருள்களுக்காக அநீதியான முறையில் உயர்த்தப்பட்ட விலையை உடனடியாகக் குறைத்து விடு’ என்று அரசைக் கோரும் வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.

எரிபொருளுக்கான அதிகரித்த திடீர் விலையேற்றம் அனைத்துப் பொருட்களுக்குமான மறைமுக விலையேற்றத்திற்குக் காரணமாக அமைந்து விடும் என்பதால் இந்த விலையேற்றம் மக்களிடம் அதிருப்தியைத் தோற்றுவித்திருப்பதாக சமூக ஆய்வாளர்கள் கருதுகின்றார்கள்.

இதேவேளை ஜனாதிபதி கையை உயர்த்தி மக்களுக்கு வாழ்த்துக் கூறும் மேதின சுவரொட்டிகளின் கீழேயும், மேலேயும் குறித்த ‘அநீதி ! எரிபொருள் விலையை உடனடியாகக் குறை’ என்ற சுவெரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளமை அப்பிரதேச மக்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com