தமிழ் සිංහල English
Breaking News

16 வயது சிங்கள மாணவி வர்த்தகர் ஒருவருக்கு விற்பனை .!

பாடசாலை மாணவியொருவரை விற்பனை செய்து பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம், தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண்ணொருவர் உள்ளிட்ட மூன்று பேர் எதிர்வரும் 18ம் திகதி வரை, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். நீர்க்கொழும்பு நீதவான் நீதிமன்றால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

40 வயதுடைய பெண்ணொருவரும், 23 வயதுடைய அவரின் மகனும் மற்றும் வாகன விற்பனையில், ஈடுபட்டு வரும் 46 வயதுடைய நபரொருவருமே இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களாவர்.பாதிக்கப்பட்ட குறித்த பாடசாலை மாணவி தற்போதைய நிலையில் , நீர்க்கொழும்பு

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.கடான காவற்துறையின் குழந்தைகள் பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய நேற்று, மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது , சந்தேகநபரான பெண் மாணவியை உந்துருளியொன்றில் அழைத்துச் சென்று, வர்த்தகர் ஒருவருக்கு விற்பனை செய்ய முற்பட்ட வேளையில் கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை , குறித்த பெண்ணின் மற்றுமொரு மகன் பிரதேசத்தில் இருந்து தலைமறைவாகியுள்ளதாக, காவற்துறை தெரிவித்தது. அவரை கைது செய்ய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, காவற்துறை மேலும் தெரிவித்தது. கிம்புலாபிட்டி பிரதேசத்தை சேர்ந்த 16 வயதுடைய மாணவியொருவரே இவ்வாறு, துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com