தமிழ் සිංහල English
Breaking News

ரயில் நிலைய அதிகாரிகளின் போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தம்..!

நாவலபிட்டி பகுதியைச் சேர்ந்த ரயில் நிலைய அதிபர்கள் உள்ளிட்ட பணியாளர்களின் போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இவர்கள், நேற்று (வியாழக்கிழமை) நள்ளிரவு முதல்  ஆரம்பித்த குறித்த போராட்டத்தை இன்று கைவிட்டுள்ளனர்.

வடகொட ரயில் நிலையத்தின் பணியாளர் ஒருவருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஒழுக்காற்று நடவடிக்கையை முன்னிறுத்தியே  இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் கலந்துரையாட ரயில் பொது முகாமையாளர் இணக்கம் தெரிவித்தமையை தொடர்ந்து குறித்த போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்படதாக கூறப்படுகின்றது.

ரயில் நிலைய அதிபர்கள்,பணியாளர்கள் மற்றும் ரயில் பொது முகாமையாளருக்கும் இடையில் கலந்துரையாடலொன்று இன்று இடம்பெறவுள்ளமையும்  குறிப்பிடத்தக்கது.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com