தமிழ் සිංහල English
Breaking News

இந்துக்க‌ல்லூரி அதிப‌ருக்கெதிராக க‌ல்வி அமைச்சு உட‌ன‌டி ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டும்.!

திருகோண‌ம‌லை ச‌ன்முகா இந்து க‌ல்லூரியில் க‌ற்பிக்கும் முஸ்லிம் ஆசிரியைக‌ள் த‌ம‌து க‌லாசார‌ ஆடையான‌ அபாயா அணிந்து வ‌ர‌க்கூடாது என‌ க‌ல்லூரி அதிப‌ர் க‌ட்ட‌ளையிட்ட‌தாக‌வும் இத‌னை ஆசிரியைக‌ள் ஏற்றுக்கொள்ள‌வில்லை என‌வும் தெரிகிற‌து. இவ்வாறு இன‌வாத‌மாக‌ செய‌ற்ப‌டும் இந்துக்க‌ல்லூரி அதிப‌ருக்கெதிராக க‌ல்வி அமைச்சு உட‌ன‌டி ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டும் என‌ உல‌மா க‌ட்சி கோரிக்கை விடுக்கிற‌து.

இது ப‌ற்றி உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்திருப்ப‌தாவ‌து,

ஆடை அணிவ‌து என்ப‌து அவ‌ர‌வ‌ர் க‌லாசார‌மாகும். சாரி என்ற‌ பெய‌ரில் சில‌ ஆசிரியைக‌ள் தொப்பையையும், தொப்பிளையும், இடுப்புப்ப‌குதி ம‌ற்றும் மார்பின் அள‌வை காட்டும் வித‌மாக‌வே சாரி அணிந்து செல்வ‌தை காண்கிறோம். இதுவெல்லாம் ஆபாச‌மாக‌ ப‌ல‌ருக்கும் தெரிய‌வில்லை. மாறாக‌ க‌லாசார‌ம் என்கிறார்க‌ள். ஆனால் ஒரு முஸ்லிம் ஆசிரியை த‌ன‌து முக‌ம் த‌விர்ந்த‌ உட‌லை ம‌றைத்து அபாயா அணிவ‌தை இந்துக்க‌ல்லூரி த‌டுப்ப‌து என்ப‌து ப‌ச்சை இன‌வாத‌மாகும்.

முஸ்லிம் பாட‌சாலைக‌ளில் க‌ற்பிக்கும் எத்த‌னையோ ஆண் ஆசிரிய‌ர்க‌ள் பாட‌சாலைக்கு வ‌ரும் போது பொட்டு வைத்திருப்ப‌தையும் த‌மிழ் பெண்க‌ள் இடுப்பைக்காட்டும் சாரி அணிந்து வ‌ருவ‌தையும் முஸ்லிம் மாண‌வ‌ர்க‌ள் ச‌கிக்கின்றார்க‌ளே த‌விர‌ த‌மிழ் ஆசிரியைக‌ள் அபாயா அணிந்து வ‌ர‌ வேண்டும் என‌ கூறுகிறார்க‌ளா?

இந்துக்க‌ல்லூரி இந்துக்க‌ளுக்கு ம‌ட்டுமே என்றால் அத‌னை இந்துக்க‌ளே ந‌டாத்த‌ வேண்டுமே த‌விர‌ அர‌சின் பொறுப்பில் இருக்க‌ கூடாது. சிங்க‌ள‌ நாடு சிங்க‌ள‌வ‌ருக்கே என்ப‌து போன்ற‌ இன‌வாத‌மே இந்து க‌ல்லூரி இந்துக்க‌ளுக்கு ம‌ட்டுமே என‌ சொல்வ‌தாகும்.

எம்மை பொறுத்த‌ வ‌ரை மேற்ப‌டி க‌ல்லூரி அதிப‌ர் முஸ்லிம் பெண் ஆசிரியைக‌ளின் அபாயாவை க‌ள‌ட்ட‌ சொன்ன‌தை பாரிய‌ இன‌வாத‌மாக‌வும் ம‌னித‌ உரிமை மீற‌லாக‌வும் பார்க்கிறோம். அவ‌ரின் அத்து மீற‌லை க‌ண்டித்து பாட‌சாலைக்குச்சென்று இவ்வாறு உத்த‌ர‌விட‌ வேண்டாம் என்றும் த‌ம‌து ம‌னைவிய‌ரான‌ ஆசிரியைக‌ள் அபாயா அணிந்தே வ‌ருவ‌ர் என‌ அதிப‌ரிட‌ம் எடுத்துரைத்த‌ க‌ண‌வ‌ன்மாரை பாராட்டுகிறோம். ம‌னைவி க‌டைவிரித்து இடுப்பை காட்டுவ‌தை பார்த்துக்கொண்டிருக்கும் போக்க‌ற்ற‌ க‌ண‌வ‌ன்மார் ம‌த்தியில் இவ‌ர்க‌ளின் செய‌ற்பாடு பாராட்டுக்குரிய‌தாகும்.

ஆக‌வே சில‌ சிங்க‌ள‌ இன‌வாதிக‌ள் அபாயா ப‌ற்றியும் முஸ்லிம் பெண்க‌ளின் ஆடைதெரிவு சுத‌ந்திர‌ம் ப‌ற்றியும் இன‌வாத‌மாக‌ பேசுவ‌து போல் த‌மிழ் பேரின‌வாத‌மும் இருப்ப‌து க‌வ‌லைக்குரிய‌தாகும். இத்த‌கைய‌ இன‌வாத‌ க‌ண்ணோட்ட‌ம் பாட‌சாலைக‌ளையும் ஆக்கிர‌மிப்ப‌தை அர‌சு த‌டை செய்வ‌துட‌ன் மேற்ப‌டி இந்துக்க‌ல்லூரி முஸ்லிம் ஆசிரியைக‌ளின் க‌லாச்சார‌ ஆடையை த‌டை செய்ய‌ முய‌லும் ச‌க்திக‌ளை அர‌சு த‌ண்டிக்க‌ வேண்டும் என‌ உல‌மா க‌ட்சி கேட்டுக்கொள்கிற‌து.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com