தமிழ் සිංහල English
Breaking News

நல்லாட்சி அரசாங்கத்துக்குள், பல்வேறு கருத்துக்கள்.!

நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சி முறையை இல்லாமல் செய்யும், 20 ஆவது நகல் திருத்தச்சட்ட மூலம் தொடர்பாக நல்லாட்சி அரசாங்கத்துக்குள், பல்வேறு கருத்துக்கள் நிலவுவதாக அமைச்சரவைத் தகவல்கள் கூறுகின்றன.

நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சி முறைய இல்லாமல் செய்யும் விடயத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆர்வமாகவுள்ளார். ஆனால் இது தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் ஜனாதிபதி வெளிப்படையாக பேசவில்லை. எனினும் மூத்த உறுப்பினர்களுடன் உரையாடினார் என்று கட்சித் தகவல்கள் கூறுவதாக  தெரிவித்தார்.

19 ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம், ஜனாதிபதிக்குரிய சில நிறைவேற்று அதிகாரங்கள், 2015 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்திற்கு பாரப்படுத்தப்பட்டுள்ளன. ஆனாலும் அந்த அதிகாரத்தை முழுமையாக நீக்க வேண்டும் என ஜே.வி.பி. உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

தற்போது மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியும் வலியுறுத்தி வருகின்றது. இந்த நிலையில் ஐக்கியதேசியக் கட்சி மாத்திரமே நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சி முறையை நீக்க தயங்குகின்றது.

ஏனெனில், 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில், ஜனாதிபதியாக ஐக்கியதேசியக் கட்சியைச் சேர்ந்த ஒருவர், அல்லது கட்சியை மையப்படுத்திய ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் ஒருவர், ஜனாதிபதியாக போட்டியிட்டு வெற்றி பெற முடியும் என ஐக்கிய தேசியக் கட்சி நம்புவதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே தான், 20 ஆவது நகல் திருத்தச்சட்ட மூலத்திற்கு ஆதரவாக பேசினாலும், அந்தச் சட்டத்தை நிறைவேற்ற ஐக்கியதேசியக் கட்சி விருப்பம் தெரிவிக்காது என கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலர் கூறுகின்றனர்.

ஏனெனில் 20 ஆவது திருத்தச் சட்ட மூலத்தை அமூல்படுத்தி பிரதமர் தலைமையிலான ஆட்சியை அறிமுகப்படுத்தினால், அந்த சட்டத்தின் மூலம், மஹிந்த ராஜபக்ச பொதுத் தேர்தலில் போட்டியிட்டு, பிரதமராக வரக்கூடிய சந்தர்ப்பம் உள்ளதாகவும் அதற்கு இடமளிக்க முடியாது என்ற கருத்தையும் ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலர் சுட்டிக்காட்டுவதாக  தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் இந்தக் கருத்தை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலர் ஏற்றுக்கொள்கின்றனர். ஆனாலும் 20 ஆவது திருத்தச் சட்ட மூலத்தின் ஊடாக மஹிந்த ராஜபக்சவை விட, மைத்திரிபால சிறிசேனவை பிரதமராக முடியும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருப்பதாகவும் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

இவ்வாறனதொரு நிலையில, 20 ஆவது திருத்தச்சட்ட மூலம் தொடர்பாக நல்லாட்சி அரசாங்கம் தற்போதைக்கு அக்கறை செலுத்தக் கூடிய நிலை இல்லை. ஆனாலும் கூட்டு எதிர்க்கட்சியின் தீவிர முயற்சியின் காரணமாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சில சமயங்களில் 20 ஆவது திருத்தச் சட்டத்தை ஜே.வி.வி.யின் ஆதரவுடன் கொண்டு வர முற்படலாம் எனவும் உள்ளகத் தகவல்கள் கூறுவதாக  கூறினார்.

நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சிமுறைய நீக்க வேண்டும் என ஜே.பி.வி, 1994ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதல், அப்போதைய ஜனாதிபதி சந்தரிக்காவிடம் வலியுறுத்தியது. ஜே.வி.பியின் ஒரேயொரு நாடாளுமன்ற உறுப்பினரான நிஹால் கலபதி, இந்தக் கோரிக்கையின் அடிப்படையில் சந்திரிக்காவின் பொதுஜன முன்னணி அரசாங்கத்துக்கு, அன்று ஆதரவு வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com